இந்தியாவின் சந்திரயான் 3 வெற்றிக்கு உலக நாடுகளும் காத்திருப்பது ஏன்? பின்னணி விவரம்
சந்திரயான் 3 விண்கலம் வெற்றி பெற வேண்டும் என்று பல்வேறு உலக நாடுகளும் காத்திருப்பதற்கான முக்கிய காரணம் ஏன் என்பதை விளக்குகிறது இந்த செய்தி குறிப்பு.
சந்திரயான் 3 தொலைத்தொடர்பு அமைப்பு
இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலத்தின் நகர்வு மற்றும் செயல்பாட்டு தரவுகளானது பெங்களூரு தொலைத்தொடர்பு மையத்திலிருந்து மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள ஏழு பிரம்மாண்ட தொலைத்தொடர்பு மையங்கள் மூலம் கட்டுப்படுத்தப்பட்டு தொடர்ச்சியாக தகவல்கள் பெறப்பட்டும் அனுப்பப்பட்டும் வருகிறது.
சந்திரயான் 3 திட்டம் தொடங்கப்படும் போது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் நாசா இதற்கான தகவல் தொடர்பு உதவிகளை வழங்குவதாக தெரிவித்து இருந்தது.
Great job tonight by the personnel behind Deep Space Station antenna dishes #DSS34 and #DSS36 @CanberraDSN, and #NNO1 at the @esaoperations #estrack station at New Norcia, Western Australia.
— CanberraDSN ? (@CanberraDSN) August 23, 2023
Both stations are staffed & managed by @CSIRO, Australia’s national science agency. ??? pic.twitter.com/XW7JVYhGmN
உலக நாடுகளின் ஆண்டனாக்கள் சந்திரயான்-3 திட்டத்தில் பயன்படுத்தியது ஏன்?
பூமி கோள வடிவம் கொண்டது என்பதால் நிலவை நோக்கி இந்தியா இருக்கும் போது மட்டும் தான் இந்திய தகவல் தொடர்பு மையங்களால் சந்திரயான் 3 லேண்டருடன் சுலபமாக எந்தவொரு இடையூறுமின்றி தகவல் தொடர்புகளை வைத்துக் கொள்ள முடியும்.
இதே நிலவின் மறுப்பக்கம் இந்தியா இருக்கும் போது இந்திய தகவல் தொடர்பு மையங்களால் மிக எளிதாக சந்திரயான் 3 லேண்டருடன் தொடர்பு வைத்துக் கொள்ள முடியாது.
எனவே உலகின் பல பகுதிகளில் உள்ள பிரமாண்ட ஆண்டனாக்களின் உதவியை பயன்படுத்தி இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையம் சந்திரயான் 3 லேண்டருடன் தொடர்ந்து சுலபமாக தகவல் தொடர்பு வைத்து வருகிறது.
Chandrayaan-3 Mission:
— ISRO (@isro) August 22, 2023
The mission is on schedule.
Systems are undergoing regular checks.
Smooth sailing is continuing.
The Mission Operations Complex (MOX) is buzzed with energy & excitement!
The live telecast of the landing operations at MOX/ISTRAC begins at 17:20 Hrs. IST… pic.twitter.com/Ucfg9HAvrY
இந்த சந்திரயான் 3 திட்டத்தின் கீழ், ஜேர்மனி, பிரித்தானியா, பிரான்ஸ், கயானா, ஆவுஸ்திரேலியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள நாசாவின் தகவல் தொடர்பு நெட்வொர்க் ஆண்டனாக்களின் உதவியை இஸ்ரோ பயன்படுத்தி வருகிறது.
அந்த வகையில் சந்திரயான் 3 லேண்டர் நிலவில் தரையிறங்கும் போது துல்லியமான தகவல் தொடர்பு தேவைப்படும் என்பதால் அவுஸ்திரேலியாவின் நியூ நோர்ச்சியா ஆண்ட்டனாக்கள் சந்திரயான் 3 உடன் தொடர்பு கொள்ள பயன்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் அடுத்த 3 நாட்களுக்கு அவுஸ்திரேலியாவின் நியூ நோர்ச்சியா ஆண்ட்டனாக்கள் நிலவில் உள்ள சந்திரயான் 3 லேண்டருடன் தொடர்பில் இருக்கும் என தகவல் தெரியவந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |