சந்திராயன்-3 வெற்றிக்கு உறுதுணை! வறுமையிலும் சாதித்த இளைஞரின் கதை
சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறங்குவதற்கு உறுதுணையாக இருந்த இளைஞரின் கதையை தான் பார்க்க போகிறோம்.
யார் இந்த இளைஞர்
இந்திய மாநிலம், சதீஷ்கரைச் சேர்ந்த பாரத்குமார் என்ற இளைஞர் சந்திரயான் 3 திட்டத்தில் விஞ்ஞானியாக பணியாற்றியது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சதீஷ்கர் மாநிலம், துர் மாவட்டத்தில் உள்ள சரௌடா நகரத்தைச் சேர்ந்த சந்திரமௌலீஸ்வரர் மற்றும் வனஜா தம்பதியினருக்கு பிறந்தவர் தான் பாரத்குமார். இவருக்கு லாவண்யா என்ற சகோதரியும் உள்ளார்.
இவரின் பெற்றோர்கள் முதலில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்துள்ளனர்.அப்போது பாரத்குமார் ஹோட்டலில் உள்ள வேலைகளை முடித்த பின்னரே படிக்கும் நிலை இருந்துள்ளது. பின்பு, ஹோட்டலில் வருமானம் இல்லாததால் பாரத்குமாரின் தந்தை வங்கி காவலுக்கான பணியில் சேர்ந்தார்.
படிப்பிற்கு உதவிய தொழிலதிபர்கள்
வறுமையில் இருந்த பாரத்குமாரின் படிப்பிற்கு பள்ளி நிர்வாகமே உதவி செய்தது. இதனால், நன்றாக படித்த பாரத்குமார் பிளஸ் 2 தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார்.
பின்னர் இவர், உயர்கல்வி படிக்க தன்பாத் ஐஐடியில் உள்ள மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பில் சேர்ந்தார். அப்போதும், இவரை வறுமை வாட்ட கல்லூரி படிப்பை நிறுத்தும் நிலைமை வந்தது.
ஆனால், அப்போது இவரை பற்றிய செய்தி ஊடகங்களில் பரவி பரபரப்பாக பேசப்பட்டது. அப்போது, ராய்ப்பூரை சேர்ந்த தொழிலதிபர் ராம்தாஸ் ஜோக்லேகர், அருண் பாக் மற்றும் ராய்கரைச் சேர்ந்த சாந்த் ராம் ஆகியோர் பாரத்குமாரின் படிப்பு செலவை ஏற்பதாக கூறினர். அதை சிறிதும் வீணாக்காத பாரத்குமார் 7 செமஸ்டர் தேர்வில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.
இஸ்ரோவில் பணியாற்ற வாய்ப்பு
பின்னர், கல்லூரி நேர்முகத்தேர்வின் மூலம் பாரத்குமாருக்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது.
அங்கு, சந்திரயான் 3 திட்டத்தில் பணியாற்றவும் வாய்ப்பு கிடைத்து தனது குழுவினருடன் கடுமையாக உழைத்தார். தற்போது இவர், கல்வியில் பின்தங்கிய மாநிலமான சத்தீஷ்கரின் ஹீரோவாக இவர் இருக்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |