சந்திரயான்-3 தரையிறங்கும் திகதியில் மாற்றம் ஏற்படுமாம்; இஸ்ரோ அறிவிப்பு!
இந்தியாவில் இருந்து நிலவிற்கு தனது பயணத்தை மேற்க்கொண்ட சந்திரயான்-3 விண்கலமானது தரையிறங்கும் திகதியில் மாற்றம் ஏற்பட்ட வாய்ப்பு உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
சந்திரயான்-3
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் -3 ஐ அனுப்பியது.
இந்த விண்கலனானது பூமியிலிருந்து சந்திரனுக்குமான பயணம் சுமார் ஒரு மாதம் ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மற்றும் ஆகஸ்ட் 23 அன்று தரையிறக்கம் செய்வதாக எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நேற்றைய தினம் சந்திரயான்-3 தரையிறங்கும் நேரம் மாற்றப்பட்டது. இதையடுத்து 2019 இல் அணுப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தின் சிக்னல் கிடைத்து, தரையிறங்குவதற்கு இன்னும் இலகுவாக இருக்கும் என்று அறிவித்திருந்தது.
Chandrayaan-3 Mission:
— ISRO (@isro) August 21, 2023
‘Welcome, buddy!’
Ch-2 orbiter formally welcomed Ch-3 LM.
Two-way communication between the two is established.
MOX has now more routes to reach the LM.
Update: Live telecast of Landing event begins at 17:20 Hrs. IST.#Chandrayaan_3 #Ch3
ஆனால் தற்போது தரையிறங்கும் திகதியில் மாற்றம் ஏற்படும் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
திகதியில் மாற்றம்
அதன் உயரத்தை படிப்படியாக குறைத்து நிலவில் தரை இறக்குவதற்கான பணிகளில் இஸ்ரோ தற்போது தீவிரமான வேலையில் இருந்து வருகின்றது.
கடந்த 18 ஆம் திகதி அதன் சுற்றுப்பாதை தூரம் குறைக்கப்பட்டு, ற்போது நிலவின் தரைப்பரப்புக்கு நெருக்கமாக குறைந்தபட்சம் 24 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 134 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்று வட்டப்பாதைக்கு நேற்றைய தினம் கொண்டு வரப்பட்டது.
ஆகவே சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் நாள் பிற்போது வாய்ப்பு உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதற்கான சூழல் சாதகமற்றதாக காணப்பட்டால் 27ஆம் திகதி வரை தள்ளிப்போகும் என இஸ்ரோவின் அகமதாபாத் மை இயக்குனர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |