சந்திரயான்-3: விக்ரம் லேண்டரை உறங்கும் நிலையில் இருந்து எழுப்ப விஞ்ஞானிகள் முயற்சி
லேண்டர் மற்றும் ரோவரை நாளை உறக்க நிலையில் இருந்து எழுப்பவுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சந்திரயான்-3
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் -3 ஐ அனுப்பியது.
இந்த விண்கலனானது பூமியிலிருந்து சந்திரனுக்குமான பயணம் சுமார் ஒரு மாதம் ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மற்றும் ஆகஸ்ட் 23 அன்று தரையிறக்கம் செய்யப்பட்டது.
இதையடுத்து தனது பணியையும் வெற்றிகரமாக செய்து வந்தது. ஆனால் தற்போது உறக்க நிலையில் இருந்து வருகின்றது. ஆனால் நாளைய தினம் விக்ரம் லேண்டரானது உறங்கு நிலையில் இருந்து விழிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருகின்றது.
விழித்தெழும் விக்ரம் லேண்டர்
சந்திரனின் சுற்றுச்சூழல் கிட்டத்தட்ட 200 டிகிரி உறைபனி நிலையால் சூழப்பட்டு இருக்கும். இந்த கடுமையான காலநிலையில் இருந்து தொழில்நுட்ப உபகரணங்கள் மீண்டும் வேலை செய்யும் என்பது ஒரு சாத்தியமற்ற நிகழ்வாகும்.
ஆகவே இஸ்ரோ விஞ்ஞானிகள் விக்ரம் லேண்டரை உறங்கு நிலையில் இருந்து எழுப்பும் பணிகள் நாளை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
சோலார் பேனல் ஒளியைப் பெற்று, பேட்டரி சார்ஜ் ஆகி, செயல்பாட்டிற்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் நிலவின் தென் துருவம் தொடர்பான தகவல்களை உலகத்திற்கு இஸ்ரோ தெரிவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |