சந்திரயான் - 3: விக்ரம் லேண்டருக்கு என்ன தான் ஆச்சு?
இந்தியாவின் மூன்றாவது சந்திர ஆய்வுப் பணியான சந்திரயான்-3 நிலவுக்கு சென்ற நிலையில் தற்போது உறக்க நிலையில் இருப்பதால் மீண்டும் தனது பணியை எப்போது ஆரம்பிக்கும் என்று கேள்விகள் எழும்பியுள்ளது.
சந்திரயான்-3
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் -3 ஐ அனுப்பியது.
இந்த விண்கலனானது பூமியிலிருந்து சந்திரனுக்குமான பயணம் சுமார் ஒரு மாதம் ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மற்றும் ஆகஸ்ட் 23 அன்று தரையிறக்கம் செய்யப்பட்டது.
இதையடுத்து தனது பணியையும் வெற்றிகரமாக செய்து வந்தது. ஆனால் தற்போது உறக்க நிலையில் இருந்து வருகின்றது என்று யாரும் அறிந்ததே. இந்நிலையில் விக்ரம் லேண்டர் மீண்டும் எப்போது தனது பணியை ஆரம்பிக்கும் என சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
விக்ரம் லேண்டர் ஏன் தூங்க வைக்கப்பட்டது?
விக்ரம் லேண்டர் செப்டம்பர் 4 அன்று உறக்க முறையில் வைக்கப்பட்டது. 14 நாட்கள் நீடிக்கும் சந்திர இரவில், சந்திரனின் சுற்றுச்சூழலானது அபரிமிதமான இருள் மற்றும் கிட்டத்தட்ட -200 டிகிரி உறைபனி வெப்பநிலையால் சூழப்பட்டு இருக்கும். இத்தகைய கடுமையான காலநிலையில் தொழில்நுட்ப உபகரணங்கள் உயிர்வாழ்வது சாத்தியமில்லை. ஆகவே தான் உறக்க நிலைக்கு செல்லப்பட்டது.
உறக்க நிலையில் இருக்கும் லேண்டர்
லேண்டர் மற்றும் ரோவர் செப்டம்பர் 22 இல் விழித்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சந்திரனில் அடுத்த சூரிய உதயத்தின் போது சோலார் பேனல் ஒளியைப் பெற்று விழித்தெலும்.
மேலும் 22 ஆம் திகதியன்று தனது செயற்பாட்டிற்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |