சந்திரயான்-3 பூமிக்கு திரும்புமா? 14 நாட்களுக்கு பிறகு விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் நிலை என்ன?
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) லட்சிய விண்வெளி பணியான சந்திரயான்-3 ஆகஸ்ட் 23 அன்று மாலை 6:40 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
பிரக்யான் ரோவர் விக்ரம் லேண்டரில் இருந்து வெளியே வந்து சந்திர மேற்பரப்பில் கால் வைத்தது. அடுத்த 14 நாட்களுக்கு நிலவின் மேற்பரப்பில் தொடர் சோதனைகள் நடத்தப்படும். ரோவர் பிரக்யான் சந்திர மேற்பரப்பில் இருந்து ஏதேனும் தரவுகளை சேகரித்தால், அது விக்ரம் லேண்டருக்கு அனுப்பும். விக்ரம் பிரக்யான் சேகரிக்கப்பட்ட தரவுகளை பூமிக்கு அதாவது பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பும்.
ஆனால் இப்போது 14 நாட்களுக்குப் பிறகு என்ன நடக்கிறது என்று மக்கள் கேட்கிறார்கள். சந்திரயான்-3 பூமிக்கு திரும்புமா? என்ன நடக்கும் என்ற விவரங்களை இங்கே பார்க்கலாம்..
சந்திரயான்-3 14 நாட்களுக்கு பிறகு என்ன நடக்கும்?
14 நாட்களுக்குப் பிறகு சந்திரன் இருட்டாக மாறும். விக்ரம் மற்றும் பிரக்யன் சூரிய ஒளியில் மட்டுமே வேலை செய்ய முடியும். ஆனால் நிலவின் தென்துருவம் மிகவும் குளிராக இருக்கிறது. இதனால் 14 நாட்களுக்கு பிறகு விக்ரம் மற்றும் பிரக்யான் செயலிழந்து விடும். அதாவது, சந்திரயான்-3 விண்கலம் தரவுகளை சேகரிக்க 14 நாட்கள் மட்டுமே இருக்கும்.
நிலவில் இரவும் பகலும் சேர்த்து ஒரு நாள் என்பது பூமியில் 28 நாட்கள். அதாவது பூமியின் காலத்தை கொண்டு அளவிட்டால் நிலா 14 நாட்கள் இரவில் கழிக்கும் பின்னர் சூரியன் உதயமாகி 14 நாட்கள் பகலை கொண்டிருக்கும்.
எனவே, ஒரு சந்திர பகல் 14 பூமி நாட்களுக்கு சமம். ஆனால், சந்திரனுக்கு மேல் சூரியன் மீண்டும் உதயமானதும், விக்ரமும் பிரக்ஞும் மீண்டும் தங்கள் வேலையைத் தொடங்குமா.? என்றால், இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் இப்போதைக்கு இதில் எந்த ஐடியாவும் இல்லை. அதாவது இரண்டுமே மீண்டும் செயல்படவும் வாய்ப்புள்ளது. இரண்டும் மீண்டும் செயல்பட தொடங்கினால் அது இந்தியாவின் சந்திர பயணத்திற்கு போனஸாக இருக்கும்.
ஏனெனில் அடுத்த 14 நாட்கள் நிலவின் தென்துருவம் சூரிய ஒளி இல்லாமல் கடுமையான மைனஸ் வெப்பநிலையில் இருக்கும், அங்கு மைனஸ் 180 முதல் மைனஸ் 200 டிகிரி வரை செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வெப்பநிலையில் அங்கு என்னவேண்டுமானாலும் நடக்கலாம். இதனால், விக்ரம் லெண்டரும் பிரக்யான் ரோவரும் செயலிழந்து போகவும் வாய்ப்புள்ளது.
Chandrayaan-3 Mission:
— ISRO (@isro) August 26, 2023
🔍What's new here?
Pragyan rover roams around Shiv Shakti Point in pursuit of lunar secrets at the South Pole 🌗! pic.twitter.com/1g5gQsgrjM
சந்திரயான்-3 பூமிக்கு திரும்புமா?
விக்ரமும் பிரக்யனும் மீண்டும் பூமிக்கு வரத் தேவையில்லை. இரண்டும் நிலவிலேயே இருக்கும். இஸ்ரோ ஏற்கனவே சந்திரயான் 3 தரையிறங்கும் தளத்தின் படத்தைப் பகிர்ந்துள்ளது. புதன்கிழமை மாலை 6.04 மணிக்கு மென்மையான தரையிறங்கலுக்குப் பிறகு விக்ரம் தனது கேமராவில் இந்தப் படத்தை எடுத்தது.
சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் ஒப்பீட்டளவில் தட்டையான மேற்பரப்பில் தரையிறங்கியது. சந்திரயான்-3-ன் மொத்த எடை 3,900 கிலோ. ப்ரொபல்ஷன் மாட்யூல் 2,148 கிலோ எடையும், லேண்டர் மாட்யூல் விக்ரம் 1,752 கிலோ எடையும், ரோவர் பிரக்யான் 26 கிலோவும் அடங்கும்.
இப்போது நிலவில் ரோவர் பிரக்யான் என்ன செய்யும்?
ஆய்வுகள் சந்திர மேற்பரப்பின் வேதியியல் கலவையை ஆய்வு செய்கின்றன. சந்திர மண் மற்றும் பாறைகளை ஆராய்கிறது. இது துருவப் பகுதிகளுக்கு அருகிலுள்ள சந்திர மேற்பரப்பில் உள்ள அயனிகள், எலக்ட்ரான்கள் மற்றும் வெப்ப பண்புகளின் அடர்த்தியை அளவிடுகிறது. வேறு எந்த நாடும் நிலவின் தென் துருவத்திற்குச் செல்லாத நிலையில், இது இந்தியாவின் சாதனை.
Chandrayaan-3 Mission:
— ISRO (@isro) August 29, 2023
In-situ scientific experiments continue .....
Laser-Induced Breakdown Spectroscope (LIBS) instrument onboard the Rover unambiguously confirms the presence of Sulphur (S) in the lunar surface near the south pole, through first-ever in-situ measurements.… pic.twitter.com/vDQmByWcSL
ரஷ்யாவின் லூனா-25 விண்கலமும் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க திட்டமிடப்பட்டது. இருப்பினும், ரஷ்ய லூனா-25 மிஷன் ஆகஸ்ட் 21 அன்று விபத்துக்குள்ளானது. இந்தியாவின் இஸ்ரோ தனது இரண்டாவது முயற்சியாக நிலவின் தென் துருவத்தில் சந்திரயானை வெற்றிகரமாக தரையிறக்கியுள்ளது. முன்னதாக 2019-ல் சந்திரயான்-2 விண்கலம் தரையிறங்கியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |