சந்திராயன் 3 வெற்றியில் நாமக்கல் மண்!
சந்திராயன் 3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதை தொடர்ந்து விஞ்ஞானிகளுக்கு உலகத்தலைவர்கள் பலரும் வாழ்த்துகளை கூறிவருகின்றனர்.
அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் நிலவுக்கு விண்கலன்களை அனுப்பியுள்ளன.
அந்த வகையில் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது இந்தியா.
இந்தியாவின் சந்திரயான்-1 விண்கலம்தான் நிலவில் தண்ணீரின் மூலக்கூறுகள் இருப்பதை கண்டறிந்தது.
அதனைத்தொடர்ந்து 2019-ம் ஆண்டு இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் -2 விண்கலம் தரையிறங்க முடியாமல் தோல்வியை தழுவியது.
ஆனால் தற்போது சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமாக நிலைநிறுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளது. இதனை நாடு முழுவதும் உள்ள மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனா்.
சந்திராயன் 3 வெற்றியில் நாமக்கல் மண்!
இந்த வெற்றிக்கு நாமக்கல் மாவட்டம் குன்னமலை, சித்தம்பூண்டி, ராமதேவம் ஆகிய கிராமங்களில் இருந்து எடுக்கப்பட்ட தாது மண்ணும் மூலக்காரணிகளால் ஒன்றாக கருதப்படுகிறது.
நிலவின் மேற்பரப்பை போல் வடிவம் கொண்ட மண் சாா்ந்த பகுதிகள் இந்த மூன்று கிராமங்களில் சுமாா் 5.45 சதுர கிலோமீட்டா் பரப்பளவில் உள்ளன.
இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திரயான்-3 விண்ணில் ஏவப்படுவதற்கு முன்பாக, இந்த கிராமங்களில் இருந்து எடுக்கப்பட்ட 50 டன் மண்ணை கொண்டு தான் பரிசோதனை நடத்தினா். அதில் திருப்தியடையவே அடுத்தகட்ட நடவடிக்கைகளை தொடங்கினா்.
இதற்கான ஏற்பாடுகளை சேலம் பெரியாா் பல்கலைக்கழகப் புவி தகவலியல், கோளவியல் துறையினர் செய்தனர்.
சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தடம் பதித்த வெற்றியால் , நாமக்கல் மாவட்ட மக்களும், குறிப்பாக சித்தம்பூண்டி உள்ளிட்ட மூன்று கிராம மக்களும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |