குழந்தையை கொடூரமாக தாக்கிய 21 வயது கணவன் - பொலிசில் புகார் கொடுத்த 41 வயது நடிகை
குழந்தையை கொடூரமாக தாக்கிய 21 வயது கணவன் மீது பிரபல நடிகை போலீசில் புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தையை தாக்கிய நடிகையின் 21 வயது கணவன்
இந்தியில் சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை சந்திரிகா சாஹா. இவருக்கு வயது 41 ஆகிறது.
இவருக்கு திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட கருத்து மோதலால் விவாகரத்து பெற்றார்.
தனிமையில் வாழ்ந்து வந்த சாஹா, அமன் மிஸ்ரா என்ற தொழிலதிபரை காதலித்து வருகிறார். இவருக்கு 21 வயதுதான் ஆகிறது.
இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் லிவ்விங் டுகெதரில் வாழ்ந்து வருகின்றனர். இதனையடுத்து சாஹா கர்ப்பமாகியுள்ளார்.
ஆனால், இந்த குழந்தை வேண்டாம் என்று அமன் மிஸ்ரா சாஹாவிடம் கூறியுள்ளார். ஆனால், சாஹா கருவை கலைக்க முடியாது என்று கூறி குழந்தையை பெற்றெடுத்தார்.
குழந்தை பிறந்ததிலிருந்து இருவருக்குள்ளும் அடிக்க சண்டை வந்துள்ளது. சாஹா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி விடாபிடியாக இருந்ததால் வேறு வழியில்லாமல் அமன் மிஸ்ரா - சந்திரிகா சாஹா ஜோடி கடந்த மாதம் முறைப்படி திருமணம் செய்துள்ளார்.
தற்போது குழந்தை 15 மாதங்கள் ஆகிறது. அமன் மிஸ்ராவிடம் குழந்தையை கொடுத்து விட்டு சாஹா சமைக்க சென்றுள்ளார்.
அப்போது அமன் குழந்தையை தரையில் இழுத்துப் போட்டு பயங்கரமாக அடித்துள்ளார். வலி தாங்க முடியாமல் குழந்தை கதறி அழவே, சாஹா ஓடி வந்துள்ளார்.
அப்போது, அமன் குழந்தையை கொடூரமாக அடித்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அமனிடம் குழந்தையை மீட்ட சாஹா உடனடியாக, மும்பை மலாடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.
இதனையடுத்து, அமன் மீது பொலிசில் புகார் கொடுத்தார் சாஹா. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் அமனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
15 மாத குழந்தை கொடூரமாக தாக்கிய நடிகை சாஹாவின் விஷயம் தற்போது இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.