போஸ்டர் ஒட்டுவதில் தொடங்கி உருளைக்கிழங்கு சிப்ஸில் முடிந்த கதை! ரூ.4,000 கோடி வருமானம் பெறும் சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர்
தொழிலதிபர் ஒருவர் ரூ.10 ஆயிரம் முதலீட்டில் தொடங்கி, ரூ.4,000 கோடி வருமானம் பெறும் நிறுவனத்தை உருவாக்கியுள்ளார்.
சந்துபாய் விரானி
இந்திய மாநிலம், குஜராத்தில் பிறந்த தொழிலதிபர் சந்துபாய் விரானி. இவரது குடும்பம் ஏழ்மையில் இருந்ததில் 10 -ம் வகுப்பு வரை மட்டுமே இவரால் படிக்க முடிந்தது. பின்பு, சந்துபாயின் குடும்பம் துண்டோராஜி நகருக்குச் சென்றனர்.
இதனைத்தொடர்ந்து, சந்துபாயும் அவரது சகோதரர்களான மெகஜிபாய் மற்றும் பிகுபாய் ஆகியோர் சேர்ந்து ரூ.20,000 முதலீட்டில் விவசாயப் பொருட்கள் மற்றும் இயந்திரங்களை விற்பனை செய்தனர்.
ஆனால், இந்த தொழில் 2 வருடங்களில் நஷ்டம் அடைய ஆரம்பித்தது. இதன் பின்னர் வருமானத்திற்காக, போஸ்டர் ஓட்டுவது, கேண்டீன் நடத்துவது என பகுதி நேர வேலைகளை செய்தனர். இருந்தாலும், இவரது குடும்பம் வாடகை செலுத்துவதற்கு கூட பணம் இல்லாமல் கஷ்டப்பட்டது.
உருளைக் கிழங்கு சிப்ஸ் ஆலை
அப்போது, திரையரங்கில் கேண்டீன் நடத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் தான் பார்வையாளர்கள் அதிகமாக விரும்பி உண்ணும் திண்பண்டத்தை பற்றி சந்துபாய் தெரிந்து கொண்டார்.
பின்பு, ரூ.10,000 முதலீட்டில் வீட்டிலேயே சிப்ஸ் தயாரிக்க ஆரம்பித்தார். அதன், சுவையையும் தரத்தையும் பொருத்து மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றது.
இதனைத்தொடர்ந்து, கடந்த 1989 -ம் ஆண்டு ராஜ்கோட்டில் இந்தியாவின் முதல் உருளைக் கிழங்கு சிப்ஸ் ஆலையை தொடங்கினார். அடுத்த மூன்று ஆண்டுகளில் சகோதரர்கள் இணைந்து வேஃபர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை தொடங்கி ஒவ்வொரு நாளும் 10 மில்லியன் கிலோ திண்பண்டங்களும், 6.5 மில்லியன் கிலோ உருளைக் கிழங்கு சிப்ஸ்களும் தயாரித்தனர்.
2021 -ம் ஆண்டு இவர்களுடைய நிறுவனத்தின் வருமானம் ரூ.4,000 கோடியை எட்டியது. மொத்தம் 5,000 ஊழியர்கள் இந்த நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள். இதில், 50 சதவீதம் பெண்கள் ஆவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |