ஐபிஎல் தொடரில் முக்கிய அணியில் ஏற்பட்ட மாற்றம்! பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பிரபல வீரர்
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய பந்துவீச்சுப் பயிற்சியாளராக டேமின் ரைட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐபிஎல் போட்டியில் கடந்த 13 வருடங்களில் இருமுறை மட்டுமே பிளேஆஃப் சுற்றுக்கு பஞ்சாப் அணி தகுதி பெற்றுள்ளது. கடந்த வருடம் ஆறாம் இடத்தைப் பிடித்தது.
2008, 2014 ஆகிய வருடங்களில் மட்டுமே பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றதால் அதன் பெயரை மாற்ற அணி உரிமையாளர்களான நெஸ் வாடியா, நடிகை ப்ரீத்தி ஜிந்தா, கர்ண் பால், மோஹித் பர்மன் ஆகியோர் முடிவு செய்தார்கள். அதன்படி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பெயர் பஞ்சாப் கிங்ஸ் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இந்நிலையில் அவுஸ்திரேலிய முன்னாள் முதல்தர கிரிக்கெட் வீரர் டேமின் ரைட், பஞ்சாப் கிங்ஸ் ஐபிஎல் அணியின் புதிய பந்துவீச்சுப் பயிற்சியாளராகத் தேர்வாகியுள்ளார்.
ஹோபர் ஹரிகேன்ஸ் அணியின் பயிற்சியாளராகவும் வங்கதேசத்தின் யு-19 அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் அவர் பணியாற்றியுள்ளார். முதல்தர கிரிக்கெட்டில் 123 ஆட்டங்களில் 406 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் டேமின் ரைட்.