லிஸ் ட்ரஸ் ராஜினாமா செய்ததும் பிரித்தானிய நாணயத்தின் மதிப்பில் ஏற்பட்ட ஆச்சரிய மாற்றம்
பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸ் தனது பதவியை ராஜினாமா செய்ததுமே, பிரித்தானிய நாணயத்தின் மதிப்பில் ஆச்சரிய மாற்றம் ஏற்பட்டது.
பிரித்தானியாவில் புதிதாக அமைக்கப்பட்ட அமைச்சரவையின் முதல் மினி பட்ஜெட் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து வரலாறு காணாத அளவில் பவுண்டின் மதிப்பு வீழ்ச்சியடைந்தது.
பிரித்தானியாவில் புதிதாக அமைக்கப்பட்ட அமைச்சரவையின் முதல் மினி பட்ஜெட் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 37 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பவுண்டின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததாக The Sun முதலான பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
CREDIT: REUTERS/Henry Nicholls
இந்நிலையில், பிரித்தானிய பொருளாதாரத்தை மீட்க இயலாத பிரதமர் லிஸ் ட்ரஸ், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
லிஸ் ட்ரஸ் ராஜினாமா செய்வதாக அறிவித்ததுமே பிரித்தானிய நாணயத்தின் மதிப்பில் ஆச்சரிய மாற்றம் ஒன்று ஏற்பட்டது.
ஆம், உடனடியாக டொலருக்கு எதிரான பவுண்டின் மதிப்பு உயர்ந்தது.
கடந்த மாதம் 26ஆம் திகதி நிலவரப்படி $1.06 அளவுக்கு வீழ்ச்சியடைந்த பவுண்டின் மதிப்பு, லிஸ் ட்ரஸ் ராஜினாமா செய்வதாக அறிவித்ததும் $1.13 ஆக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.