டிசம்பர் 1ஆம் திகதி முதல்... பிரெஞ்சு நகரமொன்றில் மக்களுக்காக சில நல்ல மாற்றங்கள்
டிசம்பர் 1ஆம் திகதி முதல், பிரெஞ்சு நகரமொன்று, பொதுப்போக்குவரத்தை இலவசமாக்குவது முதல் சில மாற்றங்களைச் செய்ய உள்ளது.
இலவசமாக்கப்படும் பொதுப்போக்குவரத்து
தெற்கு பிரான்சில் அமைந்துள்ள நகரம் மாண்ட்பெல்லியா். 2020 கணக்கெடுப்பின்படி, அந்நகரத்தின் மக்கள்தொகை 299,096 ஆகும்.
மாண்ட்பெல்லியா் நகர நிர்வாகம், டிசம்பர் 1ஆம் திகதி முதல், காற்று மாசுவைக் குறைக்கும் நோக்கிலும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கிலும் சில மாற்றங்களைச் செய்ய இருக்கிறது.
அவற்றில் ஒன்று, பொதுப்போக்குவரத்து முற்றிலும் இலவசமாக்கப்படுவதாகும்.
பிற மாற்றங்கள்
இலவச போக்குவரத்து போக, மக்கள் இடையூறின்றி சைக்கிள்களில் செல்வதற்காக சாலையின் இரு ஓரங்களிலும் சைக்கிள்கள் செல்வதற்காக தனிப்பாதைகள் அமைக்கப்பட உள்ளன.
புகையைக் கக்கும் மோட்டார் வாகனங்களுக்கு பதிலாக சைக்கிள்களைப் பயன்படுத்துவது, காற்று மாசுவைக் குறைப்பதுடன், சைக்கிள் ஓட்டுவது நல்ல உடற்பயிற்சி என்பதால், அது மக்களுடைய ஆரோக்கியத்துக்கும் நன்மை பயக்கக்கூடியதாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |