2026 ஜனவரி முதல் வரும் முக்கிய மாற்றங்கள் - எதெல்லாம் தெரியுமா?
ஜனவரி 1, 2026 முதல் வங்கித் துறையில் பல விதிகள் மாறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை ஒவ்வொரு 15 நாட்களுக்கும் புதுப்பிக்கப்பட்ட கிரெடிட் ஸ்கோர் தரவு, இப்போது ஒவ்வொரு வாரமும் புதுப்பிக்கப்படும்.

இது கடன் வாங்குபவர்கள் மற்றும் கிரெடிட் கார்டு பயனர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். SBI, PNB, HDFC உள்ளிட்ட பல வங்கிகள் தங்கள் கடன் வட்டி விகிதங்களை திருத்தியுள்ளன. இதனுடன், நிலையான வைப்பு விகிதங்களிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அரசு சேவைகள் மற்றும் வங்கி வசதிகளைப் பெற ஆதார்-பான் இணைப்பு ஜனவரி முதல் கட்டாயமாகும். வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற தளங்களில் நிதி மோசடியைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எல்பிஜி சமையல் எரிவாயு மற்றும் வணிக எரிவாயு சிலிண்டர்களின் புதிய விலைகள் ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும். கூடுதலாக, விமான எரிபொருள் விலைகளில் ஏற்படும் மாற்றங்கள் விமான டிக்கெட் விலைகளையும் பாதிக்க வாய்ப்புள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் மலேசியாவின் அணுகுமுறையைப் பின்பற்றி, 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு கடுமையான விதிகளைக் கொண்டுவருவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.
மாசுபாட்டைக் கட்டுப்படுத்த டெல்லி மற்றும் நொய்டா போன்ற நகரங்கள் பெட்ரோல் வாகனங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்புள்ளது.
7வது சம்பளக் குழுவின் காலம் டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடைவதால், 8வது சம்பளக் குழு ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படி அதிகரிக்கும்.
பிரதான் மந்திரி கிசான் யோஜனாவின் கீழ் தவணைகளைப் பெற விவசாயிகளின் அடையாள அட்டை கட்டாயமாகும். இந்த ஆவணம் இல்லாமல், கணக்கில் பணம் வரவு வைக்கப்படாது.
விவசாயிகள் தங்கள் பயிர்கள், காட்டு விலங்குகளால் சேதமடைந்தாலும் காப்பீட்டுத் தொகையைப் பெறுவார்கள். இருப்பினும், சேதம் ஏற்பட்ட 72 மணி நேரத்திற்குள் சேதத்தைப் புகாரளிப்பது கட்டாம்.