ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி முதல்... கனடாவில் புலம்பெயர்தல் தொடர்பில் சில முக்கிய மாற்றங்கள்
கனடாவில், ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி முதல், புலம்பெயர்தல் தொடர்பில் சில முக்கிய மாற்றங்கள் அமுலுக்கு வந்துள்ளன.
புலம்பெயர்தல் தொடர்பில் சில முக்கிய மாற்றங்கள்
1. கனடா பாஸ்போர்ட் கட்டணம் உயர்வு
மார்ச் 31இலிருந்தே, கனேடிய பாஸ்போர்ட் கட்டண உயர்வு அமுலுக்கு வந்துள்ளது.

அதன்படி, கனடாவில் 10 ஆண்டுகள் செல்லத்தக்க, பெரியவர்களுக்கான பாஸ்போர்ட் கட்டணம் 160 டொலர்களிலிருந்து 163.50 டொலர்களாக உயர்கிறது.
ஐந்து ஆண்டுகள் செல்லத்தக்க பெரியவர்களுக்கான பாஸ்போர்ட் கட்டணம், 120 டொலர்களிலிருந்து 122.50 டொலர்களாக உயர்கிறது.
2. பாஸ்போர்ட் பரிசீலனை
ஏப்ரல் 1 முதல், கனடாவில் பாஸ்போர்ட் பரிசீலனை காலகட்டம் 30 வேலை நாட்களாக அதிகரிக்க உள்ளது.
விடயம் என்னவென்றால், 30 நாட்களுக்குள் உங்கள் பாஸ்போர்ட் விண்ணப்பம் பரிசீலிக்கப்படவில்லையென்றால், நீங்கள் செலுத்திய கட்டணம் உங்களுக்குத் திருப்பிக் கொடுக்கப்படும்.
அதாவது, இலவசமாக உங்கள் பாஸ்போர்ட் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும்.
3. Right of citizenship கட்டணம் உயர்வு

மார்ச் 31இலிருந்து, Right of citizenship கட்டணம், 3.25 டொலர்கள் அதிகரித்து, 119.75டொலர்களிலிருந்து 123 டொலர்களாக உயர்கிறது.
4. சூப்பர் விசாவுக்கான வருவாய் வரம்பு நெகிழ்த்தப்படுகிறது
கனேடிய குடிமக்கள் அல்லது கனேடிய நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்றவர்கள், தங்கள் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டியை ஸ்பான்சர் செய்வதற்கான வருவாய் வரம்பை சந்திக்கும் வழிமுறைகள் சற்று எளிதாக்கப்பட்டுள்ளன.
5. மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரம்
மாகாண நாமினேஷன் திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிப்பதில் மார்ச் 30 முதல் மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுபோக, கிராமப்புறங்களில் வெளிநாட்டவர்களுக்கு கூடுதல் பணி அனுமதிகள், சஸ்காட்செவன் புலம்பெயர்வோர் நாமினி திட்டத்துக்கான விண்ணப்பக் கட்டணம் உயர்வு, பொருளாதார வகுப்பு நிரந்தரக் குடியிருப்பாளர்களுக்கான நிதி உதவி தொடர்பில் சில மாற்றங்கள் என பல மாற்றங்கள் அமுலுக்கு வந்துள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |