2024 நவம்பர் மாதத்தில் பிரான்சில் நிகழவிருக்கும் சில முக்கிய மாற்றங்கள்
2024ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பிரான்சில் நிகழவிருக்கும் சில முக்கிய மாற்றங்கள் குறித்து இந்த செய்தியில் காணலாம்
குறைந்தபட்ச ஊதியம் அதிகரிப்பு
புதிய மாதத்தின் துவக்கம், பணியாளர்களுக்கு ஒரு நல்ல செய்தியுடன் துவங்குகிறது. ஆம், வழக்கமாக பிரான்சில் குறைந்தபட்ச ஊதியம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 1ஆம் திகதியில்தான் அமுலுக்கு வரும்.
ஆனால், விலைவாசி உயர்வு போன்ற விடயங்களால் மக்கள் பாதிக்கப்பட்டுவருவதால், இம்முறை இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே குறைந்தபட்ச ஊதியம் உயர இருக்கிறது.
ஆக, 1,398 யூரோக்கள் ஊதியம் பெற்றுவந்த முழுநேரப் பணியாளர்கள் இனி 1,426.67 யூரோக்களை வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம்.
எல்லைக் கட்டுப்பாடுகள்
பிரான்சில், நவம்பர் 1ஆம் திகதி முதல் புதிய எல்லைக் கட்டுப்பாடுகள் அமுலுக்கு வருகின்றன. அவை 2025ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என பிரான்ஸ் அறிவித்துள்ளது.
வீட்டை காலி செய்ய உரிமையாளருக்கு தடை நவம்பர் மாதம் 1ஆம் திகதி முதல், மார்ச் 31ஆம் திகதிவரை, வீட்டின் உரிமையாளர், வீட்டில் வாடகைக்கு வசிப்பவர் வாடகை கொடுக்க கஷ்டப்படும் நிலையில், அவரை வீட்டை காலி செய்யவைக்க தடை அமுல்படுத்தப்படுகிறது.
டயர்கள்
வாகனங்கள் வைத்திருப்போர், நவம்பர் 1ஆம் திகதி முதல் மார்ச் 31ஆம் திகதிவரை சில மலைப்பகுதிகளில் பயணிக்கும்போது அனைத்து பருவகாலங்களுக்கும் ஏற்ற, குளிர்காலத்துக்கு உகந்த டயர்கள் அல்லது மனியில் சறுக்காத டயர்களை தயாராக வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
பாரீஸ் வாகனத் தடை
நவம்பர் மாதம் 4ஆம் திகதி முதல், பாரீஸ் 'traffic limitation zone' (ZTL) விதி அமுலுக்கு வருகிறது. அந்த பகுதிகளில் வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்படுகிறது. விதிவிலக்குகளும் உண்டு என்பதால், அது குறித்து விசாரித்து அறிந்துகொள்வது நல்லது.
புகையிலை பயன்படுத்தாத மாதம்
2024ஆம் ஆண்டின் நவம்பர் மாதம், பிரான்சின் 9ஆவது 'No Smoking Month' ஆக கடைப்பிடிக்கப்படுகிறது. 30 நாட்களுக்கு புகை பிடிக்காமல் இருக்கமுடியுமா என மக்கள் தங்களுக்குத் தாங்களே சவால் விடுத்துக்கொள்ளும் காலகட்டம் அது.
வரி செலுத்தும் மாதம்
பிரான்சில், நவம்பர் மாதம் சொத்து வரி செலுத்தும் மாதம் ஆகும் என்பதை நினைவில் கொள்ளவும்.
EES முறை அறிமுகம் தாமதம்
ஐரோப்பிய ஒன்றியத்தின், ஷெங்கன் பகுதிக்குள் நுழையும் ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாத பயணிகளுக்கான புதிய பயோமெட்ரிக் முறை நவம்பர் 10ஆம் திகதி அறிமுகமாவதாக இருந்தது. ஆனால், அது சற்று தள்ளிப்போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரயில் பாதை பராமரிப்புப் பணிகள்
Paris - Lyon TGV அதிவேக ரயில் பாதை, பராமரிப்புப் பணிகளுக்காக நவம்பர் 9ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை மூடப்படுகிறது.
கிறிஸ்துமஸ் சந்தைகள் துவக்கம்
பிரான்ஸ், பல அருமையான கிறிஸ்துமஸ் சந்தைகள் அமைக்கப்படும் ஒரு நாடாகும். கிழக்கு பிரான்சில், பிரபல Colmar கிறிஸ்துமஸ் சந்தை இம்மாதம் 26ஆம் திகதியும், Strasbourg கிறிஸ்துமஸ் சந்தை இம்மாதம் 27ஆம் திகதியும் திறக்கப்பட உள்ளன.
பனிச்சறுக்கு ரிசார்ட்டுகள் திறப்பு
Val Thorens பனிச்சறுக்கு ரிசார்ட், இம்மாதம் 23ஆம் திகதி, வானிலையைப் பொறுத்து, திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |