ஆகத்து மாதத்தில் சுவிட்சர்லாந்தில் நிகழவிருக்கும் சில முக்கிய மாற்றங்கள்...
ஒவ்வொரு புதிய மாதமும் சில புதிய மாற்றங்களைக் கொண்டுவந்துகொண்டுதான் இருக்கின்றது. அவ்வகையில், ஆகத்து மாதத்தில் சுவிட்சர்லாந்தில் என்னென்ன மாற்றங்கள் நிகழவிருக்கின்றன என்பது குறித்துக் காணலாம்.
மருத்துவ காரணங்களுக்காக கஞ்சா பயன்பாட்டுக்கு அனுமதி
ஆகத்து 1ஆம் திகதியிலிருந்து சுவிட்சர்லாந்தில் மருத்துவ காரணங்களுக்காக கஞ்சா பயன்பாட்டுக்கு அனுமதியளிக்கப்படுகிறது.
ஐரோப்பா முழுவதுமே பயணக் குழப்பம்
ஐரோப்பா முழுவதுமே விமான நிலையங்கள் முதலான இடங்களில் மக்கள் நெருக்கடி போன்ற குழப்பங்களை கவனித்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஆகத்து மாதத்தில் பல விமான நிறுவனங்கள் 25,000க்கும் அதிகமான விமானங்களை ரத்து செய்துள்ளதால், இந்த நிலை ஆகத்து மாதத்திலும் தொடரும். சுவிட்சர்லாந்திலும் இதே நிலைதான்.
சூரிச் மாகாணத்தில் புதிய கோவிட் விதிகள்
ஆகத்து 1ஆம் திகதி முதல் சூரிச் மாகாணத்திலுள்ள கோவிட் பரிசோதனை நிலையங்கள் மற்றும் மருந்தகங்களில் மருத்துவ மாணவர்கள் மற்றும் மருந்தக உதவியாளர்கள் முதலான அடிப்படை மருத்துவப் பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே கோவிட் சோதனைக்கான மாதிரிகளை சேகரிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் மற்றவர்கள் சிலருக்கும் பயிற்சிக்குப் பின் மாதிரிகள் சேகரிக்க அனுமதியளிக்கப்பட்டிருந்தது.
பெடரல் கவுன்சில் மீண்டும் பணிக்குத் திரும்புகிறது
பல வாரங்கள் இடைவெளிக்குப்பின் பெடரல் கவுன்சில் ஆகத்து 17 அன்று பணிக்குத் திரும்புகிறது.
பள்ளிகள் திறக்கப்படுகின்றன
ஆகத்து 5 துவங்கி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. மாகாணத்துக்கு மாகாணம் இந்த திகதி மாறுபடும்.
குளிருக்கு முன் இறுதி வெப்பமான நாட்கள்
இலையுதிர் காலம் துவங்குவதற்கு முன், ஆகத்து மாதம் இறுதி வெப்பமான நாட்களைக் கொண்டுவர உள்ளது.
சுவிட்சர்லாந்தில் ஆகத்து மாதத்தில் சாதாரண நாட்களில் வெப்ப நிலை 20 டிகிரிகளில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. என்றாலும், எந்த அளவுக்கு வெப்பம் இருக்கும் என்பதை உறுதியாக கணிப்பது கடினம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Photo by FABRICE COFFRINI / AFP