8 வருடங்களுக்கு பிறகு கூகுள் Chromeல் ஏற்பட்ட மாற்றம்: மகிழ்ச்சியில் பயனர்கள்
கூகுள் நிறுவனம் 8 ஆண்டுகளுக்கு பிறகு தனது chrome உலாவியின் logoல் மாற்றம் கொண்டுவந்துள்ளது.
இணைய தேடுதலில் முதல் இடத்தில் இருக்கும் கூகுள் நிறுவனத்தின் முக்கியமான செயலிகளில் chrome உலாவியும் ஒன்று. இதனை உலகம் முழுவதும் பல மில்லியன் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் 2014 ஆம் ஆண்டிற்கு பிறகு கூகிள் chrome உலாவியின் logoல் எந்தொரு மாற்றத்தையும் கூகுள் நிறுவனம் செய்யாமல் இருந்தது.
chorme செயலியை வடிவமைத்த எல்வின் ஹூ தனது ட்விட்டரில் மாற்றம் குறித்தவிளக்கத்தை அளித்துள்ளார்.
அதில் முந்தைய chrome செயலியின் logoல் இருந்த நிழல் அமைப்பை நீக்கியுள்ளதாகவும், அதன் மையப்பகுதியில் உள்ள நீலநிற வட்டத்தை சிறுது அகலப்படுத்தி logoல் உள்ள அனைத்து வண்ணங்களையும் அதிகப்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
3d வடிவமைப்பில் இருந்த பழைய அமைப்பு தற்போது 2dயில் இருக்கும் எனவும் இது பயனர்களுக்கு புதிய அனுபவத்தை தரும் என தெரிவித்துள்ளார். மேலும் ios களில் 3d அமைப்புகளிலே தொடரும் எனவும் மற்றொரு பதிவில் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 4ம் திகதியில் வெளியான இந்த மாற்றம் ஆனது, இன்னும் சில மாதங்களில் அனைவரது செயலிகளிலும் மாற்றப்படும் என தெரிவித்துள்ளார்.
We simplified the main brand icon by removing the shadows, refining the proportions and brightening the colors, to align with Google's more modern brand expression. pic.twitter.com/Hyig51gqJq
— Elvin ? (@elvin_not_11) February 4, 2022