ஈஸ்டர் தாக்குதல்: வெளியானது சனல் 4 ‘ட்ரைலர்’
இலங்கையில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு அதாவது 2019 ஆம் ஆண்டு உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் சனல் 4 ஊடகம் வெளியிடவுள்ள ஆவணப்படத்தின் ‘ட்ரைலர்’ வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த தாக்குதலானது ஆட்சி மாற்றம் ஒன்றின் தேவைக்காகவே நடத்தப்பட்டதாக பிள்ளையானின் ஊடகப்பேச்சாளராக இருந்த அசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலின் மாஸ்டர் மைண்ட் இவர் தான்..! சனல் - 4 இல் அம்பலமாகப்போகும் அதிர்ச்சி தகவல்கள் (காணொளி)
அந்தவகையில் அவரின் கருத்துக்கமைய வெளிவரவுள்ள இந்த ஆவணப்படம் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 3.30 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் ராஜபக்ச குடும்பத்துக்கு விசுவாசமான சில அதிகாரிகள் இருப்பது தொடர்பான விடயங்கள் குறித்து ஆவணப்பதிவில் வெளியிடப்படவுள்ளததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனல் 4 ஊடகம் வெளியிட்ட ‘ட்ரைலர்’
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |