ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்த புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை
Seven year low in Channel migrant crossings: பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை, ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.
வழக்கமாக, ஜூன், ஜூலை மற்றும் ஆகத்து மாதங்களில், வானிலை ஆங்கிலக்கால்வாயில் பயணிப்பதற்கு சாதகமாக இருக்கும் என்பதால், பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோர் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும்.
ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு...
ஆனால், இந்த ஜூன், ஜூலை மற்றும் ஆகத்து மாதங்களில், 7,371 புலம்பெயர்வோர் மட்டுமே பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ளார்கள்.

பிரித்தானிய உள்துறை அலுவலகத் தரவுகளின்படி, 2020ஆம் ஆண்டுக்குப் பிறகு, அப்படி பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோர் எண்ணிக்கையிலேயே இதுதான் குறைவான எண்ணிக்கை ஆகும்.
பின்னணி அதாவது, ஏப்ரல் மாதம், பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்துவதற்காக, பிரித்தானியாவும் பிரான்சும் மூன்று ஆண்டுகளுக்கான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் புலம்பெயர்வோரைத் தடுத்து நிறுத்துவதற்காக, பிரான்சுக்கு பிரித்தானியா 766 மில்லியன் பவுண்டுகள் அளிக்க சம்மதம் தெரிவித்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக பிரான்ஸ் எடுத்துவரும் நடவடிக்கைகளைத் தொடர்ந்தே பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோர் எண்ணிக்கை குறைந்துள்ளதாக நம்பப்படுகிறது.
விடயம் என்னவென்றால், இப்படி இந்த கோடையின்போது பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோர் எண்ணிக்கை ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது என்றாலும், பெரிய படகுகளில் எக்கச்சக்கமான புலம்பெயர்வோர் பிரித்தானியாவுக்குள் நுழைவது சமீபத்தில் அதிகரித்துள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |