புலம்பெயர் சிறுமியின் மரணம்... குற்றவாளி தொடர்பில் லண்டன் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
புலம்பெயர் சிறுமி ஒருவர் மரணத்திற்கு காரணமானதாகக் குற்றம் சாட்டப்பட்டவர் விசாரணையை எதிர்கொள்ள பிரான்சுக்கு நாடு கடத்தப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஏழு வயதேயான சாரா
ஏப்ரல் 2024 ல் விமெரியக்ஸிலிருந்து பிரித்தானியாவிற்ப் புறப்பட்ட ஒரு சிறு படகில், நெரிசல் காரணமாக ஏழு வயதேயான சாரா அல்ஹாஷிமி என்ற சிறுமி உட்பட ஐவர் உடல் நசுங்கி மரணமடைந்தனர்.
இந்த விவகாரத்தில் 20 வயது Musaab Altijani என்ற சூடான் நாட்டவர் மேற்கு லண்டனில் ஹில்லிங்டன் பகுதியில் மே மாதம் கைதானார். இந்த நிலையில், விசாரணையின் பொருட்டு அந்த நபரை நாடுகடத்துவதாக மாவட்ட நீதிபதி கடந்த வாரம் தீர்ப்பளித்துள்ளார்.
மன்னிக்கவே முடியாது
இந்த விவகாரத்தில் ஐந்து மரணங்கள் தொடர்பாக பிரெஞ்சு நீதிமன்றம் தன்னிச்சையான கொலை வழக்கைப் பதிவு செய்துள்ளது. சிறுமி சாராவின் தந்தை அகமது தெரிவிக்கையில்,
என்னால் எனது மகளை காப்பாற்ற முடியாமல் போனது, என்னை என்னால் மன்னிக்கவே முடியாது என்றார். சம்பவத்தன்று அகமதுவின் மனைவி நூர் மற்றும் பிள்ளைகள் இருவரும் படகில் சிக்கியுள்ளனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |