பிரித்தானியாவின் பரபரப்பான விமான நிலையத்தில் விமானங்கள் திடீர் நிறுத்தம்: நடந்தது என்ன?
மான்செஸ்டர் விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் இறக்கைகளை வெட்டிக் கொண்டதால் குழப்பம் ஏற்பட்டது.
பிரித்தானியாவின் மான்செஸ்டர் விமான நிலையம் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றாகும்.
இங்கு காலை 6.30 மணியளவில் ஏற்பட்ட நிகழ்வு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
Easyjet விமானங்கள் ஓடுபாதையில் டாக்ஸியிங் செய்யும்போது மோதிக் கொண்டன. இதில் விமானங்களின் இறக்கையின் பகுதி உடைந்து விழுந்தது. இதன் காரணமாக புறப்பட தயாராக இருந்த விமானங்கள் நிறுத்தப்பட்டன.
மேலும் பயணங்கள் தாமதமாகலாம் என்று அறிவுறுத்தப்பட்டது.
டெய்லி மெயிலின்படி, Easyjet விமானங்களில் ஒன்று ஜிப்ரால்டருக்கு புறப்பட தயாராக இருந்ததாகவும், மற்றொன்று பாரிஸுக்கு புறப்பட தயாராக இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், விமானங்கள் எவ்வாறு மோதிக்கொண்டன, அவை ஏன் முதலில் ஒன்றுக்கொன்று மிக நெருக்கமாக இருந்தன என்பது குறித்த விசாரணை நடந்து வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |