தாக்குதல் பந்துவீச்சை ஹெட் உடைக்கிறார்: பும்ராவை புகழ்வதுபோல் கலாய்த்த முன்னாள் வீரர்
அவுஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவின் பந்துவீச்சை சாதாரணமாக உடைக்கிறார் என முன்னாள் வீரர் கிரேக் சேப்பல் கூறியுள்ளார்.
அச்சுறுத்தல் ஹெட்
இந்தியா - அவுஸ்திரேலியா அணிகள் மோதும் பாக்சிங் டே டெஸ்ட் நாளை மெல்போர்னில் தொடங்குகிறது.
ஜஸ்பிரித் பும்ரா தனது மிரட்டலான பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணியை அலறவிடுகிறார். ஆனால் டிராவிஸ் ஹெட் அதிரடி ஆட்டத்தினால் இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார்.
இந்த நிலையில் பும்ரா மற்றும் ஹெட் குறித்து அவுஸ்திரேலிய முன்னாள் வீரர் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், "பும்ராவுக்கு எதிராக ஹெட் இத்தொடரில் வெளிப்படுத்தும் செயல்பாடு, அவருடைய பயமற்ற அணுகுமுறையை காண்பிக்கிறது. பும்ராவின் வித்தியாசமான ஆக்ஷ்ன், கூர்மையான வேகம் மற்றும் துல்லியம் ஆகியவற்றுக்கு எதிராக மற்ற துடுப்பாட்ட வீரர்கள் தங்களது விக்கெட்டை காப்பாற்ற முயற்சிக்கிறார்கள்.
ஆனால் டிராவிஸ் ஹெட் அவரை மற்றொரு சாதாரண பந்துவீச்சாளராக நடத்துகிறார். அவருக்கு எதிராக அதிரடியாக விளையாடுவதால், ஓட்டங்கள் வருவது மட்டுமின்றி பும்ராவின் அச்சுறுத்தல் மற்றும் ரிதத்தையும் ஹெட் உடைக்கிறார்" என்றார்.
நொறுக்கும் திறன்
மேலும் அவர், "குறிப்பாக ஷார்ட் பிட்ச் பந்துகளை அடித்து நொறுக்கும் அவருடைய திறன் அற்புதமானது. அந்த வகையில் கடந்த 3 ஆண்டுகளில் டிராவிஸ் மிகவும் முன்னேற்றமடைந்த துடுப்பாட்ட வீரர் என்று நான் நம்புகிறேன்.
அதன் காரணமாக அவுஸ்திரேலியாவின் அடுத்த அணித்தலைவராக வருவதற்கு அவர் தகுதியானவர். டிராவிஸ் ஹெட்டின் தற்போதைய பார்ம், அவுஸ்திரேலியர்களின் வழக்கமான துடுப்பாட்ட வழிக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது.
காபா டெஸ்ட் போட்டியில் அவர் துடுப்பாட்டம் செய்தபோது என்னுடைய கண்களை தொலைக்காட்சியில் இருந்து எடுக்க முடியவில்லை" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |