வேகமாக முகத்தை வெள்ளையாக்க உதவும் Charcoal Facemask: வீட்டிலேயே தயாரிக்கலாம்
பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள தான் நினைப்பார்கள்.
ஆனால் முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.
அந்தவகையில், வீட்டிலிருந்தபடியே சரும பிரச்சனைகள் நீங்கி, முகம் வெள்ளையாக மாற Charcoal Facemask-ஐ வீட்டில் எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- கரி தூள்- 1 ஸ்பூன்
- தயிர்- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு பவுலில் கரியுடன் தயிரைக் சேர்ந்து நன்கு கலக்கவும்.
பின் முகத்தை சுத்தம் செய்து இந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே விட்டு பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
2. தேவையான பொருட்கள்
- பெண்டோனைட் களிமண்- 1 ஸ்பூன்
- கரி தூள்- 1 ஸ்பூன்
- ஆப்பிள் சைடர் வினிகர்- 1 ஸ்பூன்
- தேயிலை மர எண்ணெய்- 3 சொட்டு
பயன்படுத்தும் முறை
ஒரு பவுலில் பெண்டோனைட் களிமண், கரி தூள், ஆப்பிள் சைடர் வினிகர், தேயிலை மர எண்ணெய் சேர்த்து நன்கு கொள்ளவும்.
பின் முகத்தை சுத்தம் செய்து இதனை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே விட்டு பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
3. தேவையான பொருட்கள்
- கரி தூள்- 1 ஸ்பூன்
- எலுமிச்சை- 1 ஸ்பூன்
- தேன்- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் கரி தூள், தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து கெட்டியான பேஸ்ட்டை உருவாக்கவும்.
பின் முகத்தை சுத்தம் செய்து இதனை 15 நிமிடங்கள் தடவி, பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |