எலெக்ட்ரிக் வாகனத்திற்கு வீட்டில் சார்ஜ் போடணுமா? அரசின் அனுமதி முதல் முழு விவரம்
இந்தியா எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு (Electric Vehicles) படிப்படியாக மாறிவரும் நிலையில், அதற்கு வீட்டில் எப்படி சார்ஜ் போடலாம் என்ற முழு விவரத்தை தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
வீட்டில் சார்ஜிங் வசதி
எலெக்ட்ரிக் வாகனங்கள் வைத்திருக்கும் மக்களுக்கு வீட்டிலேயே சார்ஜ் போடுவது தான் சிறந்தது. பொதுவாக எலெக்ரிக் வாகனங்களுக்கு சார்ஜ் போட வேண்டும் என்றால் அதற்கான போர்ட் உங்களுக்கு கொடுத்துவிடுவார்கள்.
ஆனால், அதிவேகமாக செல்லக்கூடிய எலெக்ரிக் வாகனங்களுக்கு சார்ஜ் போடுவதற்கு பாஸ்ட் சார்ஜிங் யூனிட் அமைப்பு தேவை.
எங்கு அனுமதி வாங்க வேண்டும்?
முதலில் உங்களுடைய எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜிங் அமைப்பு ஏற்படுத்த முடியுமா என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
பின்பு, உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள அரசு மின்சார அலுவலகத்திற்கு சென்று அனுமதியினை பெறவேண்டும்.
சார்ஜ் போட சரியான இடம் எது?
எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜ் போடுவதற்கு இரண்டு வகையான சார்ஜர்கள் உள்ளன. முதலில் லெவல் 1 சார்ஜர் ஆனது அனைத்து வாகனங்களுக்கும் கிடைக்கும். இரண்டாவது, லெவல் 2 ஆனது 240 வோல்ட் திறன் இருக்கும் பாஸ்ட் சார்ஜ்ர் ஆகும்.
அடுத்ததாக, நீங்க எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜ் போடும் இடம் பாதுகாப்பானதா என்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், அந்த இடம் மழைநீர் எதுவும் தேங்காமல் இருக்க வேண்டும்.
சார்ஜ்ர் அமைப்பிற்கு சோதனை அவசியம்
நீங்கள் உங்களுக்கு சார்ஜ்ர் அமைப்பதற்கு மேனுவல் முறைப்படி அமைக்கலாம். இல்லையென்றால், இதில் தேர்ச்சி பெற்ற ஒரு நபரை அழைத்து அமைக்கலாம். அதாவது, பாஸ்ட் சார்ஜர் வசதி அமைப்பதற்கு உங்களுக்கு தேர்ச்சி பெற்ற நபர் அவசியம் தேவைப்படுவார்.
மேலும், சார்ஜர் அமைத்த பிறகு அதனை பலமுறை பரிசோதனை செய்து ஏதாவது கோளாறுகள் இருக்கிறதா என்பதை சரிபார்க்க வேண்டும். அது தான், உங்களுக்கும், உங்களுடைய வாகனத்திற்கும் பாதுகாப்பாக இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |