இங்கிலாந்தில் தொடர்ச்சியாக பாலியல் தாக்குதலுக்குள்ளான பெண்கள்: குற்றவாளி யார் என தெரியவந்தபோது ஏற்பட்ட அதிர்ச்சி
இங்கிலாந்தின் ஒரு பகுதியில் தொடர்ச்சியாக இளம்பெண்கள் குறிவைத்து பாலியல் ரீதியாக தாக்கப்பட்டார்கள்.
தொடர்ந்து தாக்குதலுக்குள்ளான பெண்கள்
இங்கிலாந்தின் Telford நகரிலுள்ள Hadley மற்றும் Leegomery ஆகிய பகுதிகளில், தொடர்ச்சியாக 16 முதல் 34 வயதுவரையுள்ள இளம்பெண்கள் பாலியல் தாக்குதலுக்குள்ளானார்கள்.
கடந்த மாதம் 15ஆம் திகதி முதல் 19ஆம் திகதிவரை பொலிசாருக்கு இந்த தாக்குதல்கள் தொடர்பில் 5புகார்கள் வந்துள்ளன.
இந்த சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளி சிக்கியபோது பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. காரணம், அந்த பாலியல் தாக்குதல்களை நடத்தியது ஒரு 13 வயது சிறுவன்!
பத்துக்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் பதிவு
அந்த சிறுவன் மீது, ஒன்பது பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டுகள், இரண்டு வன்புணர்வு முயற்சிக் குற்றச்சாட்டுகள் மற்றும் உடல் ரீதியாக தாக்குதல் முதலான குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் Kidderminster இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட அந்த சிறுவன், தற்போது உள்ளூர் அரசு காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளான்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.