இரவு நேரங்களில் மொபைல் போனை சார்ஜ் போட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
செல்போன் வைத்திராத நபர்களை காண்பதே அரிது என்றாகிவிட்டது. போன் இல்லாமல் நிறைய பேர் தூங்க மாட்டிக்குறாங்க என்கிற நிலை உருவாகியுள்ளது. அந்த அளவுக்கு மொபைல் போன் நம் வாழ்வில் முக்கியமான அம்சமாக விளங்குகிறது.
அப்படி தூங்கும் நேரங்களில் போன் சார்ஜ் போட்டால் போன் வெடித்து விடும் என்று நிறைய பேர் சொல்வதை கேள்விப்பட்டிருக்கிறோம்.
அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது. நீங்கள் புதிதாக மொபைல் போன் வாங்கியவுடன் 8 மணி நேரம் சார்ஜ் செய்ய வேண்டும் என்று கூறுவார்கள். ஒரு போன் தனது முழு சார்ஜ் பூர்த்தியடைய வெறும் 3 மணி நேரம் போதும். அப்புறம் எதற்கு நாம் 8 மணி நேரம் சார்ஜ் செய்ய வேண்டும்.
தூங்கும் போது நமது போன் சார்ஜ் போட்டுவிட்டு தூங்குவதால் போனில் எந்த பிரச்சனையும் ஏற்படாது. போன் தனது முழு சார்ஜ் யை அடைந்தவுடன் சார்ஜ் ஏறுவது நின்றுவிடும். அதே போல் சில நேரங்களில் போன் சூடாகவும் வாய்ப்புள்ளது. அதனால் தான் போன் யை இரவு நேரங்களில் சார்ஜ் செய்ய வேண்டாம் என்று கூறுகிறார்கள்.
போன் யை மெத்தையில் வைத்து சார்ஜ் போட்டுக்கொண்டே தூங்கும்போது ஒருவேளை போன் சூடாகி மெத்தை பற்றிக்கொள்ளவும் வாய்ப்புள்ளது. எனவே மெத்தையில் தூங்கும் போது சார்ஜ் போட்டுக்கொண்டே தூங்குவதை இனி ஒருபோதும் செய்யாதீர்கள்.
அதே போல் இரவு வேளைகளில் கரண்ட் கட் ஆகி மீண்டும் வரும், அந்த மாறி சமயங்களில் அதிக வோல்ட்டேஜ் நம் போனிற்கு வந்தால் நம் போன் பழுதடைய நிறைய வாய்ப்புள்ளது.