ருத்ர தாண்டவம் ஆடிய இலங்கை வீரர்.. தரவரிசையில் மின்னல் வேகத்தில் முன்னேற்றம்
நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் அதிவேக அரைசதம் அடித்த இலங்கை அணி வீரர் சரித் அசலங்கா, தரவரிசைப் பட்டியலில் 12 இடங்கள் முன்னேறியுள்ளார்.
சரித் அசலங்கா
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நடந்து வருகிறது. முதல் போட்டியில் இலங்கை அணியும், இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்றன. இரு அணிகளும் இடையிலான கடைசி டி20 போட்டி 8ஆம் திகதி நடக்க உள்ளது.
Twitter/@ICC
இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் சரித் அசலங்கா, முதல் போட்டியில் அதிரடியாக 41 பந்துகளில் 67 ஓட்டங்கள் விளாசினார்.
இதன்மூலம் அவர் தரவரிசைப் பட்டியலில் 12 இடங்கள் முன்னேறி 23வது இடத்தைப் பிடித்துள்ளார்.
தீக்ஷனா
அதேபோல் இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷனா, அதே போட்டியில் 22 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். இதனால் அவர் பந்துவீச்சாளர் தரவரிசைப்பட்டியலில் மூன்று இடங்கள் முன்னேறி 10வது இடத்தைப் பிடித்துள்ளார்.
@Getty Images
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், ஒருநாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் தனது மூன்றாவது இடத்தை தக்க வைத்துள்ளார்.
இலங்கை ஆல் ரவுண்டர் வனிந்து ஹசரங்கா, டி20 பந்துவீச்சாளர்கள் பட்டியலில் 695 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.