அபுதாபியில் ருத்ரதாண்டவமாடிய சரித் அசலங்கா! கதிகலங்கிய துபாய் கேபிட்டல்ஸ்
துபாய் கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில், இலங்கையின் சரித் அசலங்கா 38 பந்துகளில் 74 ஓட்டங்கள் விளாசினார்.
கைல் மேயர்ஸ் அதிரடி
சர்வதேச லீக் டி20 தொடர் போட்டியில் அபுதாபி நைட் ரைடர்ஸ் மற்றும் துபாய் கேபிட்டல்ஸ் அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வென்ற துபாய் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி அபுதாபி நைட் ரைடர்ஸ் முதலில் துடுப்பாடியது.
அன்ரிஸ் கோஸ் 17 பந்துகளில் 27 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து கைல் மேயர்ஸ் 21 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 35 ஓட்டங்கள் விளாசிய நிலையில் ரஸா ஓவரில் அவுட் ஆனார்.
சரித் அசலங்கா அதகளம்
பின்னர் மைக்கேல் பெப்பர் (10) வெளியேற, இலங்கையின் சரித் அசலங்கா (Charith Asalanka) களமிறங்கி அதிரடியில் மிரட்டினார்.
ஒரே ஓவரில் 4 பவுண்டரிகளை விரட்டிய அவர் 27 பந்துகளில் அரைசதம் அடித்தார். மேலும் 4 சிக்ஸர்களை பறக்கவிட்ட அசலங்கா 38 பந்துகளில் 74 ஓட்டங்கள் குவித்தார்.
அலிஷான் ஷரஃபு 36 ஓட்டங்கள் விளாச அபுதாபி அணி 4 விக்கெட்டுக்கு 203 ஓட்டங்கள் குவித்தது.
Char🅷🅸🆃 Asalanka 💥😎
— Abu Dhabi Knight Riders (@ADKRiders) January 26, 2025
Maiden fifty for the Sri Lankan in 💜
Charith Asalanka | #WeAreADKR | #AbuDhabiKnightRiders | #DPWorldILT20 | #ADKRvDC pic.twitter.com/wFNWhrPRl9
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |