பிரித்தானிய மன்னராக இருந்தாலும் சரி! நான் மணக்க மாட்டேன்: சார்லஸ் உடன் டேட்டிங் சென்ற டயானாவின் சகோதரி அதிரடி
டயானாவின் சகோதரியை முன்னர் டேட்டிங் செய்த சார்லஸ்.
அரச குடும்பத்துக்குள் டயானா நுழைவதற்கு காரணமாக இருந்த லேடி சாரா.
மன்னர் சார்ல்ஸ் டயானாவை காதலித்து மணப்பதற்கு முன்னர் அவரின் மூத்த சகோதரி லேடி சாரா மெக்கோர்கோடேல் என்பவருடன் டேட்டிங் சென்றார் என தெரியவந்துள்ளது.
அதாவது சாரா இல்லையென்றால் டயானா அரச குடும்ப மருமகளாகவும், இளவரசியாகவும் ஆகியிருக்க முடியாது என்பதே நிதர்சனம். டயானாவின் மூத்த சகோதரி தான் இந்த சாரா. சார்லஸும் சாராவும் 1970களில் டேட்டிங் செய்தனர்.
அப்போது 1978ல் சாரா அளித்த பேட்டியில், நான் சார்லஸை திருமணம் செய்து கொள்ள வாய்ப்பே இல்லை. நான் அவரை காதலிக்கவில்லை. ஒருவர் பிரித்தானியாவின் மன்னராக இருந்தாலும் சரி நான் விரும்பாத யாரையும் திருமணம் செய்ய மாட்டேன் என அதிரடியாக கூறினார்.
SERGE LEMOINE//GETTY IMAGES
அந்த கருத்துக்குப் பிறகு, அவர்களின் டேட்டிங் வாழ்க்கை விரைவில் மறைந்தது, அதன் பிறகு இளவரசர் சார்லஸ் டயானாவுடன் டேட்டிங் செய்யத் தொடங்கினார். முதன் முதலில் டயானாவும், சார்லஸும் சந்தித்து கொண்ட ஆண்டு 1977. அப்போது டயானாவின் வயது 16 மற்றும் சார்லஸின் வயது 29 ஆக இருந்தது.
இருவரும் 1980ல் மீண்டும் நண்பர்களான நிலையில் டேட்டிங் சென்றனர், அடுத்த ஆண்டே அதாவது 1981ல் டயானா - சார்லஸ் திருமணம் செய்து கொண்டனர். அதாவது சாரா தான் முதன் முதலில் டயானாவை சார்லஸுக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.
இவர்களுக்கு திருமணம் ஆவதற்கு ஓராண்டுக்கு முன்னரே சாராவுக்கும், நீல் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர், தற்போது வரையில் இவர்கள் அனைவரும் ஒன்றாக வாழ்கின்றனர் என தெரியவந்துள்ளது.
TIM GRAHAM//GETTY IMAGES