20ஆவது ஆண்டு திருமண நாளில் போப்பாண்டவரிடம் ஆசி பெற்ற சார்லஸ் கமீலா தம்பதியர்
பிரித்தானிய மன்னர் சார்லசும் ராணி கமீலாவும், திங்கட்கிழமை அரசுமுறை சுற்றுப்பயணமாக இத்தாலிக்கு சென்ற நிலையில், போப்பாண்டவர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் அவர்களால் அவரை சந்திக்க முடியாமற்போனது.
ஆனால், அதுவும் நன்மையாகவே முடிந்துள்ளது!
திருமண நாளில் போப்பாண்டவரிடம் ஆசி
ஆம், நேற்று, ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி போப்பாண்டவரை சந்திக்கும் வாய்ப்பு சார்லஸ் கமீலா தம்பதியருக்கு அமைந்தது.
விடயம் என்னவென்றால், நேற்று, சார்லஸ் கமீலா தம்பதியரின் திருமண நாள். இருவருக்கும் திருமணமாகி நேற்றுடன் 20 ஆண்டுகள் ஆகின்றன.
ஆக, தங்கள் 20ஆவது திருமண நாளில் போப்பை சந்திக்கும் வாய்ப்பு சார்லஸ் கமீலா தம்பதியருக்குக் கிடைத்துள்ளது.
போப் பிரான்சிஸ், மன்னர் சார்லஸ் கமீலா தம்பதியருக்கு திருமண நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ள, மன்னர் சார்லஸ், போப் பிரான்சிஸ் விரைவில் முழுமையாக நலம்பெற வாழ்த்தியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |