மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழா... பிரித்தானிய அரசு செலவிடும் தொகை எவ்வளவு? வெளியான தகவல்

Arbin
in ஐக்கிய இராச்சியம்Report this article
கமிலா அணியவிருக்கும் கிரீடம் தொடர்பில் விவாதம் ஏற்பட்டுள்ளதுடன், இந்திய அரசு தரப்பில் எதிர்ப்பும் பதிவு
சர்ச்சில் அரசாங்கமானது ராணியாருக்கான முடிசூட்டு விழாவிற்கு 1.5 மில்லியன் பவுண்டுகள் செலவிட்டுள்ளது.
மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழாவிற்கு இன்னும் 6 மாதங்கள் எஞ்சியுள்ள நிலையில், செலவாகும் தொகை தொடர்பில் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழாவானது அதிக ஆடம்பரம் ஏதுமின்றி, மிக எளிமையாக முன்னெடுக்கப்படும் என அரண்மனை வட்டாரத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. மேலும், கமிலா அணியவிருக்கும் கிரீடம் தொடர்பிலும் விவாதம் ஏற்பட்டுள்ளதுடன், இந்திய அரசு தரப்பில் எதிர்ப்பும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
@getty
பாரம்பரிய சடங்குகளின் எண்ணிக்கை குறைக்கப்படுவதுடன், வெஸ்ட்மின்ஸ்டர் குரு மடாலயத்தில் சிறப்பு விருந்தினர்களின் எண்ணிக்கையும் பாதியாக குறைக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும், மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழாவிற்கு 100 மில்லியன் பவுண்டுகள் வரையில் செலவாகும் என்றே நிபுணர்கள் தரப்பு கணித்துள்ளனர். பொதுவாக ராஜகுடும்பத்து திருமணங்களுக்கு அவர்களே பெரும்பகுதி தொகையை செலவிடுவார்கள், பாதுகாப்புக்கான செலவு மட்டும் அரசாங்கம் ஏற்கும்.
@rex
ஆனால் முடிசூட்டு விழாவிற்கான மொத்த செலவும் பிரித்தானிய அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும். 1953ல் எலிசபெத் ராணியாருக்கான முடிசூட்டு விழாவின் போது அப்போதைய பிரித்தானிய அரசாங்கம் இரண்டாம் உலகப் போரில் இருந்து மீண்டு வந்துகொண்டிருந்தது.
உணவுக்கு அப்போதும் கட்டுப்பாடுகள் அமுலில் இருந்தது. இருப்பினும் சர்ச்சில் அரசாங்கமானது ராணியாருக்கான முடிசூட்டு விழாவிற்கு 1.5 மில்லியன் பவுண்டுகள் செலவிட்டுள்ளது.
@PA
தற்போது அதன் மதிப்பு 50 மில்லியன் பவுண்டுகள் என்றே நிபுணர்கள் தரப்பு குறிப்பிடுகின்றனர். ஆனால், மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழாவிற்கு பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி, 100 மில்லியன் பவுண்டுகள் வரையில் செலவாகும் என்றே நம்புகின்றனர்.
மட்டுமின்றி, உலக அளவில் ஊடக விநியோகம் முன்னெடுப்பதால், அந்த தொகையை அரசாங்கம் மீட்டுவிட்டு என்றே நிபுணர்கள் கூறுகின்றனர்.