சார்லஸ் மன்னர் முடிசூட்டு விழா... வாயை பிளக்க வைக்கும் பாதுகாப்பு செலவு
சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவிற்கான பாதுகாப்பு செலவு மட்டும் மொத்த தொகையில் பெரும்பகுதி என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பொதுமக்கள் வரிப்பணத்தில் 250 மில்லியன்
சார்லஸ் மன்னர் முடிசூட்டு விழாவிற்காக ஒதுக்கப்பட்டுள்ள 250 மில்லியன் பவுண்டுகள் தொகையில் பெரும்பகுதியை பாதுகாப்புக்கு என செலவிட உள்ளனர்.
@getty
அதாவது சுமார் 150 மில்லியன் பவுண்டுகள் தொகையை ஆயிரக்கணக்கான பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படைகளை நிறுத்த செலவிட திட்டமிட்டுள்ளனர். மீதமுள்ள தொகை விழா மற்றும் மூன்று நாட்கள் கொண்டாட்டங்களுக்கு என ஒதுக்க உள்ளனர்.
ஆடம்பர விழா எதுவும் வேண்டாம் என மன்னர் சார்லஸ் தெரிவித்திருந்தும், அவரது ஒப்புதலுடன் முன்னெடுக்கப்படும் விழாவிற்கு பொதுமக்கள் வரிப்பணத்தில் 250 மில்லியன் பவுண்டுகள் செலவிடப்பட உள்ளது.
@PA
1953ல் ராணியாருக்கான முடிசூட்டு விழாவிற்கு பிரித்தானிய அரசாங்கம் 1.57 மில்லியன் பவுண்டுகள் செலவிட்டுள்ளது. தற்போதைய மதிப்பில் 47 மில்லியன் பவுண்டுகள் என கூறுகின்றனர்.
பாதுகாப்புக்கு மட்டும் 150 மில்லியன்
ஆனால் தொடர்ந்து அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் திட்டமிடப்பட்ட உள்நாட்டு எதிர்ப்புகள் ஆகியவை சனிக்கிழமை நிகழ்வுக்கான செலவுகளை அதிகரிக்க செய்துள்ளன.
முன்னர் 100 மில்லியன் பவுண்டுகள் செலவாகலாம் என கூறப்பட்ட நிலையில், தற்போது பாதுகாப்பு அம்சங்களுக்கு மட்டும் 150 மில்லியன் பவுண்டுகள் தேவைப்படும் என கூறுகின்றனர்.
@getty
இதனிடையே, சிறப்பு விருந்தினர்கள் விமானத்தில் பயணிப்பதற்காக சிறப்பு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அட்டவணை வகுக்கப்பட்டுள்ளதாக நேற்று இரவு உள்துறை அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும், காலநிலை மாற்ற எதிர்ப்பாளர்கள் தனியார் விமான வருகையை குறிவைக்கலாம் என்ற அச்சத்தின் மத்தியில் சிறப்பு ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட உள்ளது.
முடிசூட்டு விழா பாதுகாப்புக்கு என 150 மில்லியன் பவுண்டுகள் ஒதுக்கப்படுவது மிக அதிகந்தான். ஆனால் இறுதியில் தொகை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.