பிரித்தானிய மகாராணியார் டயானாவை திருமணம் செய்துவைக்க விரும்பியது சார்லசுக்கு இல்லையாம்: வெளியாகியுள்ள புதிய தகவல்
பிரித்தானிய மகாராணியார், டயானாவை திருமணம் செய்துவைக்க விரும்பியது சார்லசுக்கு இல்லை, அவர் தனது இன்னொரு மகனுக்குத்தான் டயானாவை திருமணம் செய்துவைக்க விரும்பினார் என்னும் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
பிரித்தானிய மகாராணியார் டயானாவை திருமணம் செய்துவைக்க விரும்பியது சார்லசுக்கு இல்லை
மறைந்த பிரித்தானிய மகாராணியார் இரண்டாம் எலிசபெத், தனது இரண்டாவது மகனான இளவரசர் ஆண்ட்ரூவுக்குத்தான் டயானா பொருத்தமாக இருப்பார் என கருதியதாகவும், ஆகவே, ஆண்ட்ரூவுக்குத்தான் அவர் டயானாவைத் திருமணம் செய்துவைக்க விரும்பியிருப்பார் என்றும் ராஜ குடும்ப எழுத்தாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Image: Getty Images
சார்லசைவிட டயானா 12 வயது இளையவர். ஆக, ஒரு சிறு பெண், வயதில் மிகவும் இளையவரான டயானாவால், எப்படி ஒரு இளவரசருக்கும், ஒரு கணவருக்கும் இடையிலான வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளமுடியும் என மகாராணியார் எண்ணியதாகவும், ஆகவே, டயானா தனது இளைய மகனான ஆண்ட்ரூவுக்குத்தான் பொருத்தமாக இருப்பார் என கருதியதாகவும் தெரிவித்துள்ளார் ராஜ குடும்ப எழுத்தாளரான Ingrid Seward என்பவர்.
நினைத்ததுபோலவே நடந்துவிட்டது
மகாராணியார் நினைத்ததுபோலவே நடந்துவிட்டது. ஆம், ஒருமுறை, சார்லசையும் டயானாவையும் தனது பால்மோரல் இல்லத்துக்கு அழைத்திருக்கிறார் மகாராணியார். அங்கு சென்ற டயானா மிகவும் மகிழ்ச்சியாக, உற்சாகத் துள்ளலுடன் காணப்பட்டாராம். அவர் இருந்த இடமெல்லாம் மகிழ்ச்சி பரவியதுபோலிருந்ததாம்.
Image: Getty Images
ஆனால், சார்லசோ, உலகிலேயே அழகான ஒரு பெண்ணை தான் கண்டுபிடித்துவிட்டதுபோல காட்டிக்கொள்ளவில்லையாம். டயானாவைப்போல் அவர் மகிழ்ச்சியாக காணப்படவில்லையாம். திருமணத்துக்குப் பின்பும், ஒரு இளம் மனைவியான தன் மீது சார்லஸ் போதிய கவனம் செலுத்தவில்லை என டயானா கருதியதாக தெரிவிக்கிறார் Ingrid Seward.
Image: Getty Images
ஆக, கடைசியில் சார்லசும் டயானாவும் பிரிந்ததுடன், அகால மரணமும் அடைந்துவிட்டார் டயானா!
Image: Getty Images
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |