இது வருத்தமளிக்கிறது! தடுப்பூசி பாதுகாப்பு குறித்து பிரித்தானியா இளவரசர் முக்கிய கருத்து
பிரித்தானியாவில் சில சமூகங்கள் கொரோனா தடுப்பூசியை அதிகம் போட்டுக்கொள்ளாதது துரதிஷ்டவசமானது என இளவசர் சார்லஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி பாதுகாப்பு குறித்து British Asian Trust webinar-ல் பேசிய வேல்ஸ் இளவரசர் சார்லஸ், கொரோனாவை எதிர்த்துப் போராடுவதில் தங்கள் கடமைக்கு அர்ப்பணித்த சுகாதாரப் பணியாளர்களைக் கண்டு தான் வியந்ததாக கூறினார்.
சமீபத்தில் பிரித்தானியாவில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது சோகமான மைல்கல்லாகும்.
நமது சமூகத்தின் குறிப்பிட்ட பிரிவுகளில், குறிப்பாக சில சிறுபான்மையின சமூகங்கள் எதிர்கொள்ளும் குறிப்பிட்ட சவால்கள் உள்ளன.
தடுப்பூசிகளை போட்டுக்கொள்வதில் உள்ள மாறுபாடுகள் என்னை மேலும் வருத்தமடைய வைக்கிறது. தடுப்பூசியை மறுப்பவர்கள் தடுப்பூசியின் நன்மை அனுபவிக்காதது துரதிஷ்டவசமானது.
தடுப்பூசிகள் உயிர்களைக் காப்பாற்றும், கடுமையான நோய்களிலிருந்து பாதுகாக்கும் மற்றும் இயல்பு நிலைக்கு திரும்ப உதவும்.
நான் மிகவும் நேசிக்கும் சிறுபான்மையின் சமூகங்களுக்கு உதவுவதில் தடுப்பூசி கொடுப்பவர்கள் வெற்றியடைய வாழ்த்துகிறேன் என இளவரசர் சார்லஸ் தெரிவித்துள்ளார்.