மன்னர் சார்லஸ் விதிவிலக்கல்ல... கட்டாயம் இதை செய்ய வேண்டும்: வலியுறுத்தும் பிரித்தானியர்கள்

Queen Elizabeth II Buckingham Palace King Charles III
By Arbin Sep 22, 2022 01:23 PM GMT
Report

ராணியார் இரண்டாம் எலிசபெத் தமது சொத்துகளுக்கான வரியை முறையாக செலுத்தி வந்துள்ளார்.

பிரித்தானிய ராஜகுடும்பத்தின் மொத்த சொத்துக்களின் மதிப்பு 24 பில்லியன் பவுண்டுகள் என கூறப்படுகிறது.

கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு பிரித்தானிய பொதுமக்கள், மன்னர் சார்லஸ் தமது தனிப்பட்ட பரம்பரை சொத்துகளுக்கு வரி செலுத்த வேண்டும் என்று வலியுறுத்துவதாக கருத்துக்கணிப்பு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 1993ல் இருந்தே ராணியார் இரண்டாம் எலிசபெத் தமது சொத்துகளுக்கான வரியை முறையாக செலுத்தி வந்துள்ளார். ஆனால், ராஜகுடும்பத்து சொத்துகள் வாரிசுகளுக்கு கைமாறும் போது அதற்குரிய வரி செலுத்த தேவையில்லை என சட்டத்தில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மன்னர் சார்லஸ் விதிவிலக்கல்ல... கட்டாயம் இதை செய்ய வேண்டும்: வலியுறுத்தும் பிரித்தானியர்கள் | Charles Inheritance Pay Tax Poll Shows

@AP

மறைந்த ராணியாரின் தனிப்பட்ட சொத்துக்களின் மதிப்பு தோராயமாக 370 மில்லியன் பவுண்டுகள் என கணிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த சொத்துகள் மன்னர் சார்லஸ் வசம் வர இருக்கிறது. இதற்கான வரியை மன்னர் செலுத்த வேண்டும் என்றே 63% பிரித்தானிய மக்கள் வலியுறுத்துகின்றனர்.

ஆனால் 16% மக்கள், மன்னர் சார்லஸ் வரி செலுத்த தேவையில்லை எனவும், 21% மக்கள் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானிய ராஜகுடும்பத்தின் மொத்த சொத்துக்களின் மதிப்பு 24 பில்லியன் பவுண்டுகள் என கூறப்படுகிறது. மேலும், கிரவுன் எஸ்டேட் எனப்படும் ராஜகுடும்பத்து மொத்த சொத்துக்களில் இருந்து ஈட்டப்படும் வருவாய் மொத்தமும் அரசிடம் ஒப்படைக்கப்படுகிறது.

மன்னர் சார்லஸ் விதிவிலக்கல்ல... கட்டாயம் இதை செய்ய வேண்டும்: வலியுறுத்தும் பிரித்தானியர்கள் | Charles Inheritance Pay Tax Poll Shows

@AP

அரசாங்கத்திடம் இருந்து குறிப்பிட்ட தொகையை ஆண்டுதோறும் ராஜகுடும்பம் பெற்றும் வருகிறது. ராணியாருக்கு சொந்தமான தனிப்பட்ட சொத்துகள் கைமாறப்படுகிறது என்றால் அதற்கான வரியை மன்னர் செலுத்துவதே முறை என மக்கள் தெரிவிக்கின்றனர்.

2016ல் தற்போதைய வெஸ்ட்மின்ஸ்டர் பிரபு தமது தந்தை இறந்த நிலையில், தமது வசமான 9 பில்லியன் பவுண்டுகளுக்கான சொத்தில் வரி விலக்கு பெற்றார். குறித்த சொத்தானது ஒரு தொண்டு நிறுவனத்தின் பெயரில் இருந்ததே காரணமாக அப்போது கூறப்பட்டது.

10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US