பொது இடத்திலேயே மன்னர் சார்லசைக் கட்டிப்பிடித்து முத்தமிடும் ஒரே ராஜகுடும்பத்துப் பெண்: இல்லை இல்லை கமீலா இல்லை
பிரித்தானிய மன்னரான சார்லசை பொது இடத்திலேயே கட்டிப்பிடித்து முத்தமிடும் ஒரே ஒரு பெண் ராஜ குடும்பத்தில் இருக்கிறார்.
அது அவரது மனைவி கமீலாவோ அல்லது குட்டிப் பேத்தி சார்லட்டோ அல்ல!
பிரித்தானிய மன்னரான சார்லசை பொது இடத்திலேயே கட்டிப்பிடித்து முத்தமிடும் ஒரே ஒரு பெண் ராஜ குடும்பத்தில் இருக்கிறார். ஒருவேளை அது அவரது குட்டிப் பேத்தியான சார்லட்டாக இருக்கலாம் என நீங்கள் நினைக்கலாம்.
ஆனால், உண்மை அது அல்ல...
மன்னரின் சகோதரியான இளவரசி ஆன்னுடைய மகளான சாரா (Zara Tindall) தான் அது!
சாராவுக்கும் மன்னர் சார்லசுக்குமான உறவு பலரை புருவம் உயர்த்த வைத்துள்ளது. இளவரசராக இருக்கும்போதும் சரி, மன்னரான பிறகும் சரி, ராஜ குடும்பத்தினர் அவரிடம் பொது இடங்களில் நெருக்கம் காட்டுவதில்லை, அது சார்லசின் முன்னாள் மனைவியான டயானாவானாலும் சரி, இந்நாள் மனைவியான கமீலாவானாலும் சரி.
Image: Getty Images
ஆனால், சாரா மட்டும் பொது இடமாக இருந்தாலும் சரி, தனது மாமாவான சார்லஸ் தோள் மீது கைபோட்டுக்கொள்வார், அல்லது, அவரது மடியில் அமர்ந்துகொள்வார்.
அத்துடன், சில நேரங்களில் தனது மாமாவான மன்னர் சார்லசுக்கு முத்தம் கொடுக்கும்போது, அவரது உதடுகளிலேயே கூட முத்தமிட்டிருக்கிறார். அதை ஊடகங்கள் விமர்சித்ததும் உண்டு.
ஆனால், மன்னர் மட்டும் முகம் சுளிப்பதே இல்லை என்கிறார் உடல் மொழி நிபுணரான Judi James. அது என்னவோ மன்னருக்கும் அவரது இந்த மருமகளுக்கும் நடுவில் மட்டும் அப்படி ஒரு அன்பு!
Image: pinterest