சார்லஸ் - கமிலாவின் காதல் குழந்தை குறித்து கவலைப்பட்ட டயானா! புதிய குண்டை தூக்கி போடும் ரகசியமாக பிறந்த மகன் என கூறும் நபர்
சார்லஸ் - கமிலா தம்பதிக்கு ரகசியமாக பிறந்ததாக கூறும் நபர்.
தனது இருப்பை டயானா அறிந்திருந்தார் என தற்போது அளித்துள்ள பேட்டி.
மன்னர் சார்லஸ் - கமிலா தம்பதிக்கு ரகசியமாக பிறந்த மகன் என கூறும் சைமன் டொரண்ட் டே தன்னை பற்றி இளவரசி டயானா அறிந்திருந்தார் என புது குண்டை தூக்கி போட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் வசிப்பவர் சைமன் டொரண்ட் டே (56). இவர் சார்லஸ் - கமிலா தம்பதிக்கு பிறந்த மகன் என தொடர்ந்து கூறி வருகிறார். அதன்படி தனது வளர்ப்பு பாட்டி மரணப்படுக்கையில் இருந்த போது தன்னிடம், நீ சார்லஸ் - கமிலாவிற்கு ரகசியமாக பிறந்த மகன் என கூறியதாக தெரிவிக்கிறார்.
ஆனால் இது தொடர்பாக சார்லஸ் இதுவரையில் எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை. ஏனெனில் இது குறித்து பேசி ஊடக விளம்பரங்களை வழங்க சார்லஸ் விரும்பவில்லை.
wikipedia/ CDT
இந்த நிலையில் சைமன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், சார்லஸ் மற்றும் கமிலா இடையே காதல் குழந்தை சாத்தியம் பற்றி இளவரசி டயானா கவலைப்பட்டார்.
இதை இறப்பதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டும் என விரும்பினார். அதன்படி டயானா என் இருப்பை அறிந்திருந்தார், ஏனெனில் டயானா தனது வாழ்க்கையைப் பற்றிய பதில்களைக் கண்டுபிடிக்கும் கட்டத்தில் இருந்தார், தனக்கு எப்படி அநீதி இழைக்கப்பட்டது என்பதை அறிய நினைத்தார்.
டயானாவின் ரகசிய அச்சங்களில் ஒன்று, சார்லஸுக்கு ஒரு ரகசிய குழந்தை இருக்கிறது என்பது.
இது தொடர்பாக எல்லா வகையான வதந்திகளும் பறந்துகொண்டிருந்தன, அதில் என்னுடைய இருப்பும் ஒன்றாக இருந்திருக்கும் என கூறியுள்ளார்.