சார்லஸ் டயானாவைப்போலவே பிரித்தானியாவில் திருமணம் செய்துகொண்ட இந்திய வம்சாவளியினர்...
சார்லஸ் டயானாவின் திருமணத்தால் கவரப்பட்ட ஒரு இந்திய ஜோடி, அவர்களைப்போலவே திருமணம் செய்யும் தங்கள் ஆசையை நிறைவேற்றிக்கொண்டுள்ளனர்.
சார்லஸ் டயானாவைப்போலவே திருமணம் செய்துகொண்ட இந்திய ஜோடி
இந்திய வம்சாவளியினரான ரவீனாவுக்கும் (Ravina Bhanot, 29) சாஹிலுக்கும் (Sahil Nichani, 28), இளவரசர் வில்லியம், இளவரசி டயானாவைப்போலவே திருமணம் செய்துகொள்ள ஆசை.
அதுவும், சார்லசும் டயானாவும் திருமணம் செய்துகொண்ட அதே தேவாலயத்தில், அவர்களைப்போலவே ஆடையலங்காரங்கள் செய்து, அவர்களைப்போலவே திருமணம் செய்துகொள்ள இருவருக்கும் ஆசை.
ஆனால், அதெல்லாம் சாத்தியமா எனும் கேள்வி எழலாம். விடயம் என்னவென்றால், ஆசைப்பட்டதுபோலவே அவர்கள் சார்லஸ் டயானாவைப்போலவே திருமணம் செய்துகொண்டார்கள்.
அதற்குக் காரணம், அவர்களுடைய பெற்றோர். ஆம், ரவீனாவின் பெற்றோரான ரவி மற்றும் சுஷ்மா (Ravi and Sushma Bhanot) ஆகிய இருவரும் பிரித்தானியாவில் மருத்துவர்கள். அவர்கள் இருவருமே, பிரித்தானியாவின் உயரிய விருதான MBE - Member of the Most Excellent Order of the British Empire என்னும் விருது பெற்றவர்கள். சாஹிலின் தந்தையான சஞ்சீவ் (Sanjiv Nichani), OBE - Officer of the Most Excellent Order of the British Empire என்னும் விருது பெற்றவர்.
ஆக, மணமக்களின் பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் ஆசையை நிறைவேற்ற ஏற்பாடு செய்துள்ளார்கள்.
ராஜ குடும்ப திருமணம் போல்...
சார்லஸ் டயானாவின் திருமணம் நடைபெற்ற புனித பால் தேவாலயத்தில் பிள்ளைகளுக்கு திருமணம் நடத்த பெற்றோர் ஏற்பாடு செய்ய, இளவரசி டயானவைப்போலவே ஆடையணிந்து, அவரைப்போலவே குதிரைகள் பூட்டிய ரதம் ஒன்றில் வந்து இறங்கிய ரவீனாவை, டயானாவின் கரம் பற்றி அவரது தந்தை அழைத்துவந்ததுபோல, ரவீனாவின் தந்தை அழைத்துவர, 300 விருந்தினர்கள் முன்னிலையில் கோலாகலமாக ரவீனா, சாஹில் திருமணம் கடந்த செப்டம்பரில் நடந்தேறியுள்ளது.
மணமக்கள் லண்டனில் வாழ்ந்தாலும், மணமகன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோட் சூட்தான் அணிந்திருந்தார்.
மேலும், தம்பதியருடைய மோதிரங்கள் மட்டுமல்ல, திருமணத்தின்போது பயன்படுத்தப்பட்ட மலர் அலங்காரங்களும் சார்லஸ் டயானாவின் திருமணத்தில் பயன்படுத்தப்பட்ட அதே மாதிரியை பின்பற்றி செய்யப்பட்டிருந்தன.
ரவீனாவும் சாஹிலும், லண்டன் குயின் மேரி பல்கலையில் மருத்துவம் பயின்றவர்கள். அவர்களுடைய பட்டமளிப்பு விழா புனித பால் தேவாலயத்தில் நடைபெற்றதாம். அப்போதே, அந்த தேவாலயத்தில் சார்லஸ் டயானா திருமணம் செய்துகொண்டதுபோல தாங்களும் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என பிள்ளைகள் ஆசைப்பட, அவர்களுடய ஆசையை பெறோர் நிறைவேற்றிவைத்துள்ளதால், பெற்றோருக்கு தங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்கள் ரவீனாவும் சாஹிலும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |