மேகன் மெர்க்கலுக்கான செலவு... மன்னர் சார்லஸ் பேச்சால் கொதித்துப்போன இளவரசர் ஹரி
திருமணத்திற்கு பின்னர் மேகன் மெர்க்கலுக்கு செலவு செய்ய முடியாது என மன்னர் சார்லஸ் கூறியது கேட்டு இளவரசர் ஹரி கடும் கோபமடைந்ததாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
பழிவாங்கப்பட்ட இளவரசர் ஹரி
தந்தை சார்லஸ் மற்றும் சகோதரர் வில்லியம் உடனான நெருக்கம் என்பது இளவரசர் ஹரிக்கு பல சந்தர்ப்பங்களில், அவர்களின் செயல்கள் மற்றும் கருத்துகளால் மோசமடைந்தே வந்துள்ளது.
@AP
இதற்கு முடிவு கட்டும் வகையிலேயே, ராஜ குடும்பத்தில் இருந்து வெளியேறும் முடிவை இருவரும் எடுத்துக் கொண்டார்கள் என புதிய நூலில் ஹரி மற்றும் மேகன் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல சந்தர்ப்பங்களில் வில்லியம் மற்றும் சார்லஸ் ஆகியோரால் ஹரி பழிவாங்கப்பட்டு வந்துள்ளார் என்றே கூறப்படுகிறது. குறிப்பாக சார்லஸ் மற்றும் வில்லியம் இருவரும் திட்டமிட்டே ஹரியை கோபப்படுத்தியதாகவும், ஒதுக்கி வைக்க முயன்றதாகவும் கூறுகின்றனர்.
மேகன் மெர்க்கலை திருமணம் செய்ய முடிவு செய்த ஹரி, அதை தமது சகோதரர் வில்லியத்திடம் முதலில் தெரிவித்திருந்தார். தொடர்ந்து தமது தந்தையிடம் தெரிவிக்க, ஒரு சந்திப்புக்கு நேரம் ஒதுக்கியிருந்தனர்.
இந்த சந்திப்பில் சார்லஸ் மற்றும் வில்லியமும் கலந்து கொண்டுள்ளனர். மட்டுமின்றி, மேகன் மெர்க்கலை திருமணம் செய்யவிருக்கும் தகவலை ஹரி கூறும் முன்னரே, வில்லியம் தந்தையிடம் தெரிவித்திருந்தார்.
ஹரியை மொத்தமாக உலுக்கிய சம்பவம்
இருப்பினும், தன் பங்கிற்கு ஹரியும் தமது விருப்பத்தை தெரிவிக்க, சார்லஸ் பதில் கூறும் முன்னர் வில்லியம் முந்திக்கொண்டு, இது உறுதியான முடிவா என வினவியுள்ளார். இதன் பிறகு நடந்த சம்பவம், ஹரியை மொத்தமாக உலுக்கியுள்ளது.
@getty
அதாவது கமிலா, கேட் மற்றும் குடும்பத்துடன் மேகன் மெர்க்கலுக்கும் செலவு செய்ய முடியாது என சார்லஸ் தமது இளைய மகனிடம் வெளிப்படையாக கூறியுள்ளார். இது ஹரிக்கு அதிர்ச்சியை மட்டுமல்ல, கோபத்தையும் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
இப்படியான ஒரு முடிவுக்கு பின்னால் வில்லியம் என்றே ஹரி நம்புவதாகவும் கூறப்படுகிறது. இதன் பின்னர் தான், தந்தை மற்றும் மகனுக்கு இடையேயான உறவில் விரிசல் அதிகரித்தது என அந்த நூலில் கூறப்பட்டுள்ளது.
மேலும், மேகன் மெர்க்கலை தாம் திருமணம் செய்து கொள்வதில் வில்லியம் உடன்படப்போவதில்லை என்பது ஏற்கனவே ஹரிக்கு தெரியும் எனவும், அந்த வாக்குவாதம் மிக மோசமாக இருந்தது என்பதும் ஏற்கனவே வெளிச்சத்துக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.