மன்னராகும் வாய்ப்புக்காக சார்லஸ் நீண்ட காலம் காத்திருக்கவேண்டும்: சார்லஸ் பிறந்தபோதே துல்லியமாக கணித்த நபர்
பிரித்தானிய மன்னராகியுள்ள சார்லஸ் பிறந்த நேரத்திலேயே, அவர் மன்னராகும் காலம் குறித்து துல்லியமாக கணித்துள்ளார் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர்.
பிறந்தபோதே கிடைத்த கௌரவம்
1948ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 14ஆம் திகதி, இளவரசி எலிசபெத்துக்கும் அவரது கணவரான இளவரசர் பிலிப்புக்கும் முதல் மகனாக பிறந்தார் சார்லஸ். இளவரசி எலிசபெத்தின் முதல் மகன் என்பதால், அவரது தாயாருக்குப் பின் அவர்தான் நேரடியாக மன்னராவார் என்னும் கௌரவம் அவருக்கு இருந்தது.
அந்த நேரத்தில், சார்லசுடைய தாத்தாவான மன்னர் ஆறாம் ஜார்ஜ் மன்னராக இருந்தார். ஆகவே, அரியணையேறும் வரிசையில் அவருக்கு முன் அவருடைய தாத்தாவும், அவரது தாயாரும் இருந்தனர்.
Image: PA
இருந்தாலும், அவர் பிறந்து மூன்றே ஆண்டுகளில் சார்லசுடைய தாத்தா இறந்துபோக, அவரது தாயாரான இரண்டாம் எலிசபெத் ராணியாக பதவியேற்க, மன்னராகும் வாய்ப்பு சார்லசுக்கு நெருங்கிவந்ததாக கருதப்பட்டது.
சார்லஸ் பிறந்தபோதே துல்லியமாக கணித்த நபர்
ஆனால், சார்லஸ் மன்னராவதற்கு நீண்ட காலம் காத்திருக்கவேண்டியிருக்கும் என மிகச்சரியாக அப்போதே கணித்தார் ஒருவர்.
வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளரான Matthew Halton என்பவர், எதிர்காலத்தில் இந்த நாட்டின் மன்னராகப்போகும் ஒரு குழந்தை பிறந்துள்ளது. அந்தக் குழந்தை இந்த நாட்டின் 41ஆவது மன்னராக பதவியேற்கும்.
Image: Mirrorpix via Getty Images
ஆனால், அந்தக் குழந்தையின் தாத்தாவாகிய மன்னரும், அதன் தாயாகிய இளவரசியும் தங்கள் முழு ஆயுட்காலத்தையும் வாழ்ந்து முடிப்பார்களேயானால், அந்தக் குழந்தை மன்னராக அரியணையேறுவதற்கு 50 அல்லது 60 ஆண்டுகள் காத்திருக்கவேண்டியிருக்கும் என்று கூறினார் Matthew Halton.
சார்லசுடைய தாயாகிய மகாராணி இரண்டாம் எலிசபெத், 70 ஆண்டுகள், 127 நாட்கள் ராணியாக ஆட்சி செய்தார். ஆக, Matthew Halton சொன்னதுபோலவே சார்லசால் தனது 74ஆவது வயதில்தான் மன்னராக பதவியேற்க முடிந்துள்ளது.
Image: UK Press via Getty Images