மன்னர் சார்லஸ், ட்ரம்ப் சந்திப்பில் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி இல்லை: தர்மசங்கட பின்னணி
மன்னர் சார்லசும் ராணி கமீலாவும் இந்த மாத இறுதியில் அமெரிக்காவுக்கு அரசு முறைப்பயணமாக செல்கிறார்கள்.
அமெரிக்கா சுதந்திரம் பெற்று 250 ஆண்டுகள் ஆவதை நினைவுகூரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக அவர்கள் அமெரிக்கா செல்ல இருக்கிறார்கள்.
ஊடகவியலாளர்கள் கிடையாது
இந்நிலையில், மன்னர் சார்லசும் ட்ரம்பும் சந்தித்துக்கொள்ளும் நிகழ்ச்சியில் ஊடகவியலாளர்கள் யாரும் அனுமதிக்கப்படப்போவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, மன்னர் சார்லசும் ட்ரம்பும் தனிப்பட்ட முறையில் சந்தித்து தேநீர் அருந்தியவண்ணம் பேசிக்கொள்ள இருக்கிறார்கள்.
காரணம் இதுதான்...
அதாவது, ட்ரம்ப் தன்னை சந்திக்கவரும் உலக நாடுகளின் தலைவர்களிடம் ஏடாகூடமாக பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
பொது இடங்களில், ஊடகவியலாளர்கள் முன்னிலையில் எதை பேசுவது என யோசிக்காமல் பேசுவதும், தன்னை சந்திக்க வரும் உலகத் தலைவர்களை தர்மசங்கடமான நிலைக்கு ஆளாக்குவதுமாக உள்ளார்.

உதாரணமாக, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி ட்ரம்பை சந்திக்க வந்தபோது, அமெரிக்கா போரின் தாக்கத்தை முழுமையாக இன்னமும் உணரவில்லை என்று கூறிய ஜெலன்ஸ்கியிடம், நாங்கள் என்ன உணரப்போகிறோம் என்பது குறித்து எங்களிடம் சொல்லாதீர்கள், எங்களுக்கு ஆணையிடும் நிலையில் நீங்கள் இல்லை என முகத்தில் அடித்தாற்போல் பேசினார் ட்ரம்ப்.
ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸ் அமெரிக்கா வந்தபோது, அவரிடம் நாஸி ஜேர்மனியிடமிருந்து பிரான்ஸ் விடுவிக்கப்பட்ட நாள் குறித்து கேலி பேசினார் ட்ரம்ப்.
சவுதி பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் அமெரிக்கா வந்தபோது அவரிடம் ஊடகவியலாளர் ஜமால் கஷோகி கொலை குறித்து ஊடகவியலாளர்கள் முன் வெளிப்படையாக கேள்வி கேட்டு அவருக்கு தர்மசங்கடமான நிலைமையை உருவாக்கினார் ட்ரம்ப்.
அதேபோல, ஜப்பான் பிரதமரான Sanae Takaichi அமெரிக்கா வந்தபோது, அவரிடம் பேர்ல் ஹார்பர் தாக்குதல் குறித்து ஜோக் அடித்து அவரையும் தர்மசங்கடமான நிலைமைக்கு ஆளாக்கினார் ட்ரம்ப்.
ஆக, இந்த மாதம் மன்னர் சார்லஸ் அமெரிக்கா செல்லும் நிலையில், ட்ரம்ப், மன்னருக்கும் இதேபோல தர்மசங்கடமான நிலைமையை உருவாக்கிவிடக்கூடாது என்பதற்காகவே, மன்னர் சார்லஸ் ட்ரம்ப் சந்திப்பின்போது ஊடகவியலாளர்களுக்கு அனுமதி இல்லை என்றும், தனிப்பட்ட முறையில் அவர்கள் சந்தித்துக்கொள்வார்கள் என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |