ட்ரம்ப் ராஜ குடும்ப விதிகளை மீறக்கூடும்: தர்மசங்கடமான நிலையில் மன்னர் சார்லஸ்
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விரைவில் பிரித்தானியாவுக்கு வருகை புரிய இருக்கும் நிலையில், அவர் ராஜ குடும்ப விதிகளை மீறக்கூடும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.
தர்மசங்கடமான நிலையில் மன்னர் சார்லஸ்
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஏற்கனவே விதிகளை மீறி மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் முதுகைத் தொட்டதை பலரும் அறிந்திருக்கலாம்.
அதேபோல, ராஜ குடும்பத்தினரை சந்திக்கும்போது சற்றே குனிந்து அல்லது தலையை அசைத்து வணக்கம் செலுத்தலாமேயொழிய, அவர்களுடன் கை குலுக்கக்கூடாது என்ற விதியையும் மீறீ அவர் மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமீலாவுடன் கைகுலுக்கியதும் உண்டு.
இந்நிலையில், சமீபத்தில் ஸ்கொட்லாந்துக்கு வந்த ட்ரம்ப், புலம்பெயர்தல் குறித்து சில கருத்துக்களைத் தெரிவித்தார். புலம்பெயர்வோர் மோசமான மக்கள், புலம்பெயர்தல் மோசமான ஊடுருவல், அது ஐரோப்பாவைக் கொன்றுகொண்டிருக்கிறது என்றெல்லாம் கூறினார் ட்ரம்ப்.
விடயம் என்னவென்றால், பிரித்தானியாவுக்கு அரசு முறைப்பயணமாக வரும் தலைவர்கள் அரசியல் ரீதியான விமர்சனங்களை முன்வைக்கக்கூடாது.
ஆனால், ட்ரம்ப் ஏற்கனவே புலம்பெயர்தல் குறித்து விமர்சனம் முன்வைத்துக்கொண்டிருக்கிறார். மன்னர் சார்லசோ, பொறுமையையும் இரக்கத்தையும் குறித்து பிரச்சாரம் செய்துவரும் நபர்.
ஆக, பிரித்தானியாவுக்கு வரும் ட்ரம்ப் புலம்பெயர்தல் குறித்து ஏதாவது விமர்சனம் முன்வைத்து தன்னை தர்மசங்கடமான நிலைக்கு ஆளாகிவிடுவாரோ என மன்னர் சார்லஸ் கவலைப்படுவதாக அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |