இளவரசர் ஹரி மேகனுடைய குழந்தைகளின் நிறம் குறித்து விமர்சித்த ராஜ குடும்ப உறுப்பினர் இவர்தான்: வெளியாகியுள்ள பரபரப்பு தகவல்

Prince Charles Prince harry Meghan markle
By Balamanuvelan Nov 29, 2021 05:40 AM GMT
Report

பிரித்தானிய இளவரசர் ஹரிக்கும், அமெரிக்க நடிகையான மேகன் மெர்க்கலுக்கும் நிச்சயம் செய்யப்பட்டுள்ளதாக 2017ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 27ஆம் திகதி அதிகாரப்பூவமாக தகவல் வெளியானது.

அப்போது, ஹரி மேகனுக்குப் பிறக்கும் குழந்தை என்ன நிறத்தில் இருக்கும் என ராஜ குடும்ப மூத்த உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியதாக, அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார் மேகன்.

ராஜ குடும்பத்தினர் இனரீதியாக விமர்சித்ததாக இந்த விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்த,ராஜ குடும்பத்தினர் இனவெறியர்கள் அல்ல என பதிலளிக்கவேண்டிய ஒரு சூழல் இளவரசர் வில்லியமுக்கு உருவாயிற்று.

இளவரசர் ஹரி மேகனுடைய குழந்தைகளின் நிறம் குறித்து விமர்சித்த ராஜ குடும்ப உறுப்பினர் இவர்தான்: வெளியாகியுள்ள பரபரப்பு தகவல் | Charless Aides Deny Book Claims Royal Racist

அப்படி, இனரீதியாக விமர்சித்தவர் யார் என்ற கேள்வியும் எழுந்தது? ஆனால், யார் அப்படி விமர்சித்தது என்ற விடயத்தை மேகனோ ஹரியோ வெளியிடவில்லை.

இந்நிலையில், வில்லியம் மற்றும் ஹரியின் வாழ்வு குறித்து விவரிக்கப்பட்டுள்ள, நாளை வெளியிடப்பட உள்ள புத்தகம் ஒன்றில், ஹரி மேகனுடைய குழந்தைகளின் நிறம் குறித்து விமர்சித்தவர், இளவரசர் சார்லஸ்தான் என குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்புத்தகத்தின் ஆசிரியரான Christopher Anderson என்பவர்தான் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, ஹரிக்கும் மேகன் மெர்க்கலுக்கும் நிச்சயம் செய்யப்பட்ட அன்று, இளவரசர் சார்லஸ், தன் மனைவி கமீலாவிடம், ஹரி மேகனின் குழந்தைகள் எப்படி இருப்பார்கள் என எனக்கு வியப்பாக உள்ளது என்று கூறியதாகவும், சற்றே அதிர்ச்சியடைந்த கமீலா, அழகாக இருப்பார்கள், அதில் எனக்கு சந்தேகமேயில்லை என்று கூறியதாகவும், உடனே சார்லஸ், அதாவது, அந்த குழந்தைகளின் நிறம் என்னவாக இருக்கும் என்று நினைக்கிறாய் என்று கேட்டதாகவும் அந்த புத்தகத்தில் Anderson குறிப்பிட்டுள்ளாராம்.

இளவரசர் ஹரி மேகனுடைய குழந்தைகளின் நிறம் குறித்து விமர்சித்த ராஜ குடும்ப உறுப்பினர் இவர்தான்: வெளியாகியுள்ள பரபரப்பு தகவல் | Charless Aides Deny Book Claims Royal Racist

இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள இளவரசர் சார்லஸின் செய்தித்தொடர்பாளர், இது ஒரு கற்பனைக்கதை என்றும், கருத்து தெரிவிக்கும் அளவுக்கு தகுதியுடைய விடயம் அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

இன்னொரு விடயம் என்னெவென்றால், மேகன் ஓபராவுடனான பேட்டியின்போது, மூத்த ராஜ குடும்பத்தினர் ஒருவர் எங்களுக்கு குழந்தை பிறப்பதற்கு முன்பே எங்கள் குழந்தையின் நிறம் குறித்து விமர்சித்தார் என்று குறிப்பிட்டிருந்தார், அந்த நபர் இளவரசர் சார்லஸ்தான் என்று Anderson தன் புத்தகத்தில் எழுதவில்லை!

அது கள்ளங்கபடமில்லாமல் சார்லஸ் கேட்ட ஒரு கேள்வி என்றும், அரண்மனை அலுவலர்களில் முக்கியப் பொறுப்பு வகிக்கும் சிலர் அதை ஊதி பெரிதாக்கிவிட்டதாகவும், அதற்கு இனவெறுப்புச் சாயம் பூசிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார் Anderson.  


மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US