பிரித்தானிய மகாராணியாரைக் குறித்து மோசமான கார்ட்டூன் வெளியிட்டுள்ள பிரெஞ்சு பத்திரிகை: மீண்டும் ஒரு சர்ச்சை ஆரம்பம்
முகமது நபியைக் குறித்து மோசமான கார்ட்டூன்கள் வெளியிட்டதால் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு ஆளாகி 12 பேரின் உயிர் பலிக்கு காரணமான அதே பத்திரிகை, இப்போது பிரித்தானிய மகாராணியாரைக் குறித்து மோசமான கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டு மீண்டும் சர்ச்சையை தொடங்கிவைத்துள்ளது.
பிரெஞ்சு பத்திரிகையான சார்லி ஹெப்டோ, முகமது நபியை அவமதிக்கும் வகையில் வெளியிட்ட கார்ட்டூன்களால் ஏற்பட்ட பிரச்சினை இன்றும் தீர்ந்தபாடில்லை.
இந்நிலையில், சர்ச்சைக்குரிய மற்றொரு கார்ட்டூனை வெளியிட்டுள்ளது அந்த பத்திரிகை.
அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கருப்பினத்தவரின் கழுத்தில், டெரக் சாவ்வின் என்ற வெள்ளையின பொலிசார் முழங்காலை வைத்து அழுத்த, மூச்சுத்திணறி உயிரிழந்தார் ஜார்ஜ்.
Is this the free speech that Charlie Hebdo is so passionate about? Racism, disrespect and offence passed off as satire? I’m sorry but no Je suis for me. This is nothing but racist bigotry and inciting hate. Do better with your platform and grow up. pic.twitter.com/Id6hL53p2G
— Yasmeen (@yasminnoir) March 13, 2021
தற்போது, அதேபோல், பிரித்தானிய மகாராணியார், இளவரசர் ஹரியின் மனைவியான மேகனுடைய கழுத்தில் முழங்காலை வைத்து அழுத்துவது போல ஒரு கார்ட்டூனை சார்லி ஹெப்டோ பத்திரிகை வெளியிட்டுள்ளது.
ஏன் மேகன் பக்கிங்காம் அரண்மனையை விட்டு வெளியேறினார் என்றொரு கேள்வியை வெளியிட்டு, அடுத்து பிரித்தானிய மகாராணியார், கருப்பின தாய்க்குப் பிறந்த கலப்பினத்தவரான மேகனுடைய கழுத்தில் முழங்காலை வைத்து அழுத்துவது போல ஒரு கார்ட்டூனை வெளியிட்டு, அதற்கு கீழே, மேலே கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலாக, என்னால் மூச்சுவிட முடியவில்லை, அதனால்தான் வெளியேறினேன் என்று மேகன் சொல்வது போல அட்டைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது, அப்பத்திரிகை.
இந்த கார்ட்டூன் மக்களிடையே கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. இதுதான் பத்திரிகை சுதந்திரமா என கேள்வி எழுப்பியதுடன், பலரும் அந்த பத்திரிகையை கடுமையாக விமர்சித்துவருகிறார்கள்.