நாடு இதுவரை கண்டிராத விடயமாக மாற்றுவேன்! கண்ணீருடன் சபதமெடுத்த சார்லி கிர்க்கின் மனைவி
கிர்க்கின் மனைவி அமெரிக்காவில் சார்லி கிர்க் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரது மனைவியின் கன்சர்வேடிவ் இயக்கத்தை தொடர உள்ளதாக உறுதியளித்தார்.
சார்லி கிர்க்
வலதுசாரி அரசியல் ஆர்வலரும், ட்ரம்பின் தீவிர ஆதரவாளருமான சார்லி கிர்க் (Charlie Kirk) பொதுவெளியில் சுட்டுக்கொல்லப்பட்டது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அவரது மனைவி எரிகா ஒளிபரப்பில் பேசியபோது, தனது கணவரின் அரசியல் பணியை தொடர உள்ளதாக சார்லி பயன்படுத்திய நாற்காலியின் அருகில் நின்று ஒன்லைன் பார்வையாளர்களிடம் கண்ணீருடன் உரையாற்றினார்.
அப்போது அவர், 'சார்லி உன் மரபை ஒருபோதும் இறக்க விடமாட்டேன் என்று நான் உறுதியளிக்கிறேன். Turning Point USA இயக்கத்தை இந்த நாடு கண்டிராத மிகப்பெரிய விடயமாக மாற்றுவேன் என்று நான் உறுதியளிக்கிறேன். வரவிருக்கும் ஆண்டுகளில் இன்னும் அதிகமான சுற்றுப்பயணங்கள் இருக்கும்' என்று கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |