அணியை ஏமாற்றிவிட்டேன்..நெருக்கடியான சூழலில் கேப்டனான வீரர்
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்தது குறித்து மேற்கிந்திய தீவுகள் அணித்தலைவர் ரஸ்டன் சேஸ் விளக்கம் அளித்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகள்
பே ஓவலில் நடந்த டெஸ்டில் நியூசிலாந்து அணி 323 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது. 
இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.
முன்னதாக மேற்கிந்திய தீவுகள் பல தோல்விகளை சந்தித்தது. நெருக்கடியான சூழலில் அணித்தலைவராக பொறுப்பேற்ற ரஸ்டன் சேஸ், தான் எதிர்கொண்ட அழுத்தம் குறித்து பேசியுள்ளார்.

என்னை நானே ஏமாற்றிக் கொண்டேன்
அவர் கூறுகையில், "இது எனக்கு கடினமான தொடராக இருந்தது என்று நினைக்கிறேன். என் தரத்திற்கு மிகவும் குறைவான செயல்திறன் வெளிப்படுத்தப்பட்டது. நான் களத்தில் முன்னின்று வழிநடத்தவில்லை.
வார்த்தைகள் மூலமாகவும், அணியை ஊக்குவிப்பதன் மூலமாகவும் வழிநடத்துவது எல்லாம் நன்றாகவே இருந்தது என்று நினைக்கிறேன்.
ஆனால், களத்தில் இறங்கி அணிக்காக சிறப்பாக செயல்பட்டு, அணி வீரர்கள் ஒரு தலைவராகப் பின்பற்றுவற்கு ஒரு முன்மாதிரியாக இருப்பதில், என்னை நானே ஏமாற்றிக் கொண்டேன், அணியையும் ஏமாற்றிவிட்டேன் என்று நினைக்கிறேன்" என்றார். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |