iOS பயனர்களுக்கான ChatGPT ஆப்! இந்தியா உட்பட 45 நாடுகளில் வெளியீடு
ஆப்பிளின் IOS-க்கான ChatGPT செயலி இப்போது இந்தியா உட்பட பல நாடுகளில் கிடைக்கின்றன.
iOS பயனர்களுக்கான ChatGPT ஆப்
iOS பயனர்களுக்கான ChatGPT ஆப் பல நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆரம்பத்தில், செயற்கை நுண்ணறிவு சாட்போட்டான ChatGPT-யின் நிறுவனமான OpenAI, அமெரிக்காவில் மட்டுமே அதன் ஆப்பை அறிமுகப்படுத்தியது.
OpenAI நிறுவனம் இந்த செயலியை மே 18 அன்று வெளியிட்டது. மேலும், இதேபோன்ற ஆண்ட்ராய்டு செயலியும் செயல்பாட்டில் இருப்பதை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
வியாழன் அன்று, IOS க்கான ChatGPT ஆப் கூடுதலாக 11 நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக OpenAI அறிவித்தது. அதையடுத்து வெள்ளிக்கிழமை வெளியான பட்டியலில் மேலும் பல நாடுகளில் உள்ள iOS பயனர்களுக்கு பயனளிக்கும் வகையில் வளர்ந்தது. அதாவது, மொத்தம் 45 நாடுகளில் இப்போது IOS க்கான ChatGPT செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியா உட்பட 45 நாடுகளில்
மே 26 வரை OpenAI நிறுவனத்தின் அறிவிப்பின்படி, iOS பயனர்களுக்கான ChatGPT செயலி இப்போது பின்வரும் 45 நாடுகளில் கிடைக்கிறது.- அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா, அல்பேனியா, குரோஷியா, பிரான்ஸ், ஜேர்மனி, அயர்லாந்து, ஜமைக்கா, கொரியா, நியூசிலாந்து , நிகரகுவா, நைஜீரியா, அல்ஜீரியா, அர்ஜென்டினா, அஜர்பைஜான், பொலிவியா, பிரேசில், கனடா, சிலி, கோஸ்டாரிகா, ஈக்வடார், எஸ்டோனியா, கானா, ஈராக், இஸ்ரேல், ஜப்பான், ஜோர்டான், கஜகஸ்தான், குவைத், லெபனான், லிதுவேனியா, மவுரித்தானியா, மகோதினியா மொராக்கோ, நமீபியா, நவ்ரு, ஓமன், பாகிஸ்தான், பெரு, போலந்து, கத்தார், ஸ்லோவேனியா, துனிசியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் கிடைப்பதாக தெரிவித்துள்ளது.
தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் ஆதரவுடன் செயல்படும் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி நிறுவனமான OpenAI , நவம்பர் 2022-ல் பொதுமக்களுக்கு ChatGPT சாட்பாட்டை வெளியிட்டது.
பிப்ரவரி 2023-ல், நிறுவனம் தனது முதல் கட்டணச் சந்தா திட்டமான ChatGPT Plus, விரைவான மறுமொழி நேரம் மற்றும் முன்னுரிமை உள்ளிட்ட பிரீமியம் சேவைகளை அறிமுகப்படுத்தியது.