வேலையை எளிதாக்க chatgpt-ஐ நம்பியிருப்பவர்கள் - ஜாக்கிரதை!
செயற்கை நுண்ணறிவு தேடுபொறியான ChatGPT 101,000 கணக்குகளின் தரவுகளை கசியவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ChatGPT போன்ற AI கருவிகளின் பயன்பாடு இப்போது அனைத்து துறைகளிலும் பரவலாக உள்ளது, ஆனால் பல தொழில்நுட்ப ஜாம்பவான்கள் தங்கள் சொந்த கருவிகளை கூட அலுவலகங்களில் இருந்து தடை செய்து வருகின்றனர். அதற்கு என்ன காரணம்? இது பாதுகாப்பானது இல்லையா?
chatgpt-ல் தரவு கசிவு
மிகவும் பிரபலமான செயற்கை நுண்ணறிவு தேடுபொறியான ChatGPT, இந்தியர்களின் தரவுகளை கசியவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சைபர் பாதுகாப்பு நிறுவனமான Group-IB இன் அறிக்கைகளின்படி, சுமார் 101,000 ChatGPT கணக்குகளின் தரவு கசிந்துள்ளது. இதில் 12,632 பேர் இந்தியர்களை சேர்ந்தவர்கள். இதில் பெரும்பாலானவை டார்க் வெப் மூலம் விற்கப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
Chat History வெளியானது
ChatGPT -யால் முந்தைய அரட்டைகளின் வரலாற்றை சேமிக்க முடியும். இது தகவல் திருடும் மால்வேரைப் பயன்படுத்தி சேகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் தனிநபர்களைப் பற்றிய பல விஷயங்களைப் புரிந்து கொள்ள முடியும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தகவல் திருடுபவர்கள் பாதிக்கப்பட்ட கணினிகளில் உள்ள உலாவிகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட தரவை அணுகுகின்றனர். இந்த வகை மால்வேர் ஃபிஷிங் தாக்குதல்கள் மூலம் ஒரே நேரத்தில் பல கணினிகளுக்குள் நுழையும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |