ChatGPTக்கு தினசரி 5.8 கோடி செலவு; திவாலாகும் நிலையில் OpenAI
2024க்குள் OpenAI திவாலாகலாம் என்று அறிக்கைகள் கூறுகின்றன.
AI கருவி Chat GPTயை உருவாக்கிய OpenAI நிறுவனம் நிதி சிக்கலில் இருக்கலாம் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஒரு முன்னணி பகுப்பாய்வு இதழின் அறிக்கையின்படி, OpenAI நிறுவனம் 2024 இறுதிக்குள் நிதி நெருக்கடியை எதிர்கொள்ளக்கூடும். நிறுவனத்தின் AI சேவைகளில் ஒன்றான Chat GPT சேவைக்கு OpenAI ஒரு நாளைக்கு 5.80 கோடி ரூபாய் செலவழிக்கிறது.
REUTERS
நிறுவனம் GPT-3.5 மற்றும் GPT-4 மூலம் வருவாய் ஈட்ட முயற்சிக்கிறது.இருப்பினும், அனலிட்டிகல் இதழின் அறிக்கையின்படி, OpenAI ஆல் செலவை சமாளிக்கும் வகையில் வருவாயை உருவாக்க முடியவில்லை.
பயனர்களின் எண்ணிக்கை குறைவு
ஜூலை மாதத்தில் மட்டும் பயனர்களின் எண்ணிக்கை 12 சதவீதம் குறைந்துள்ளது. 170 கோடி பயனர்களில் இருந்து 150 கோடியாக குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
REUTERS
இதனிடையே மற்ற நிறுவனங்களின் AI கருவிகளின் அறிமுகமும் ஓபன் AI இன் நெருக்கடியைச் சேர்த்தது. Chat GPT நவம்பர் 2022-ல் செயல்படத் தொடங்கியது. மெட்டாவின் லாமா 2 உட்பட ஓபன் ஏ கடுமையான போட்டியை எதிர்கொள்வதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
OpenAI may go bankrupt by 2024, OpenAI Chat GPT, OpenAI's chatbot Chat GPT, OpenAI loss, Artificial Intelligence