சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு இன்று முதல் அனுமதி
ஆவணி மாதம் பௌர்ணமியை முன்னிட்டு இன்று ஆகஸ்ட் 28ம் தேதி முதல் 31ம் தேதி வரை சதுரகிரி மலையேறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் அனுமதியளித்துள்ளது.
சதுரகிரி மலைகளுக்குச் செல்ல சில குறிப்பிட்ட நாட்களில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த நாட்களில் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களும் இரண்டு பிரதோஷ நாட்களும் அடங்கும்.
வருடந்தோறும் ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் சிவராத்திரி தினத்தன்று இம்மலைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அதிகமான மக்கள் மலையேறிச் சென்று வழிபட்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
அந்த வகையில், ஆவணி மாத பௌர்ணமியை முன்னிட்டு வருகிற ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.
காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது, மேலும் மலைப் பாதைகளில் உள்ள நீரோடைகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |